பேச்சு:விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயில் என்ற தலைப்பிற்கு கட்டுரையை மாற்றக் கோருகிறேன். மேலும். தற்போதைய தலைப்பு பிழையானது. விருத்தாச்சலம் விருத்தகி"ரீ"ஸ்வரர் கோயில் என்று வர வேண்டும். இதை வழிமாற்றாகவும் தற்போதைய தலைப்பை நீக்குமாறும் வேண்டுகிறேன். நன்றி! - தமிழ்க்குரிசில் (பேச்சு)

வணக்கம் தமிழ்குரிசில்.. உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி.

  1. இக்கட்டுரையை துவங்கும்முன் விருத்தகி"ரி"ஸ்வரரா (அ) விருத்தகி"ரீ"ஸ்வரரா என்கிற சந்தேகம் எனக்கும் இருந்தது. "கிரி" என்கிற வடமொழி சொல்லுக்கு "மலை", "குன்றம்" என்று பொருள். கிரீ என்கிற சொல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. விருத்தகிரி + ஈஸ்வரர் என்கிற இவ்விருசொற்களும் புணரும்போது விருத்தகிரிஸ்வரர் (அ) விருத்தகிரீஸ்வரர் என ஆகுமா என்பதை தமிழ் இலக்கண புணர்ச்சிவிதிகள் நன்கு அறிந்தவர்கள் தெளிபடுத்தினால் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன். கட்டுரை தலைப்பு குறித்து எனக்கிருந்த சந்தேகத்தைத் தீர்க்க நாளிதழ்கள், செய்தித்தாள்களில் வந்த செய்திகளை ஆராய்ந்தேன், எல்லா இடத்திலும் விருத்தகிரிஸ்வரர் என்றே இருக்கிறது. நாளிதழ்களும், செய்திதாள்களும் பயன்படுத்துவதால் மட்டுமே அந்த சொற்கள் சரிதான் என கூறுவதற்கில்லை....
  2. எனக்கும் திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயில் என்று தலைப்பிடவேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் புழக்கத்தில் வெகு சிலரே பயன்படுத்துவதாலும், பலருக்கு திருமுதுகுன்றம் என்கிற பெயர் தெரியாது என்பதாலும், மற்றவர்கள் இக்கட்டுரை குறித்து தேடும்போது ஏதுவாக இருக்குமென்று இப்படி தலைப்பிட்டேன். வழிமாற்று அமைத்து தலைப்பை மாற்றுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:58, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்தை ஏற்கிறேன் கார்த்தி! ரி+ஈஸ்வ என்பது ரீஸ்வ என்று திரியும் என நினைக்கிறேன். தினமலரிலும், wikimapia விலும் இதுவே இருந்தது. பிறர் கருத்துக்கு காத்திருப்போம். எனினும் தற்போதைக்கு இரண்டு தலைப்புகளிலும் வழிமாற்று ஏற்படுத்துங்கள். தற்போதைய தீர்வாக அமையும் நன்றி:) தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:29, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில் சொல்வது சரி என்றே நினைக்கிறேன். எ.கா அர்த்தநாரீசுவரர், அர்த்தநாரி+ஈசுவரர்--சங்கீர்த்தன் (பேச்சு) 06:43, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயில் பக்கத்திலிருந்து விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோயில் கட்டுரை பக்கத்திற்கு வழிமாற்று உருவாக்கியுள்ளேன். விருத்தகி"ரீ"ஸ்வரர் என்பது சரிதான் என உறுதியானால் பக்கத்தை விருத்தாச்சலம் விருத்தகி"ரீ"ஸ்வரர் கோயில் என்ற தலைப்பிற்கு நகர்த்திவிடலாம். நன்றி. கி. கார்த்திகேயன் (பேச்சு) 08:40, 16 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]