பேச்சு:வானூர்தி நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்பரே... வானிலையம் என்ற தலைப்பைப் படித்தவுடன் அது வானிலை ஆய்வகம் குறித்தது என்ற நினைத்தேன். ஆனால் கட்டுரையைப் படித்த பின்னரே அது விமான நிலையம் எனப் புரிந்தது. வானூர்தி நிலையம் என்றோ, விமான நிலையம் என்றோ மாற்றலாமா? விமானம் தமிழ்ச் சொல் என்றே எண்ணுகிறேன். எ.கா. கோயில் விமானம் என்று படித்ததாக நினைவு. --Ragunathan 00:20, 8 ஏப்ரல் 2010 (UTC)

வானிலையம் தமிழ்நாடு அரசு வழக்கிலுருந்து எடுத்துப் போடப்பட்டது. விமான நிலையம்/வான் நிலையம் = வானிலையம் இரண்டும் தமிழக அரசு பயன்படுத்துகிறது. அவர்கள் சொற்களுக்கு இணக்கமாதில் சுருக்கமானதை இட்டுள்ளேன். விமானம் என்பது சிலர் வடமொழி என்று கருதுகின்றன. என்னைப் பொறுத்தவரை விமானம் தமிழ் தான். விமான நிலையம் எனவும் மாற்றலாம். - ராஜ் (தொழில்நுட்பம்) - 9-4-2010

ரயில் வந்து, நின்று, ஓய்வெடுத்துச் செல்லும் இடம் ரயில் நிலையம் எனில் விமானத்திற்கும் விமான நிலையம் எனக் கூறலாம் தானே. அதனால் வானிலையம் என்பதை விமான நிலையம் என்ற பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன்.--Ragunathan 19:08, 8 ஏப்ரல் 2010 (UTC)
விமானம் என்பது Aeroplane ஐக் குறிக்கும். பொதுவாக Aircraft என்பதை வானூர்தி எனலாம். எனவே வானூர்தி நிலையம் என்பது சரியாக இருக்கலாம். விமானம் (en:Fixed-wing aircraft) என்பதற்குத் தனியான கட்டுரை எழுதப்படல் விரும்பத்தக்கது.--Kanags \உரையாடுக 22:21, 8 ஏப்ரல் 2010 (UTC)
பொதுவாக விமான நிலையத்தில் பயணியர் விமானங்களே வருகின்றன. ஹெலிகாப்டர்கள் அல்லது உலங்கூர்திகள் வருவதில்லை. இது பயணியர் விமான நிலையத்திற்கு பொருந்தும். ஆனால் ராணுவப் பயன்பாட்டில் உலங்கூர்திகளும் வரலாம். என் இருப்பிடத்தின் அருகில் உள்ள விமான நிலையத்தில் பயணியர் விமானங்களும், 15 கி.மீ. தொலைவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இரண்டு வகை ஊர்திகளும் வருகின்றன. எனவே விமான நிலையம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. எனினும் ஏனையோர் கருத்துகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--Ragunathan 22:36, 8 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வானூர்தி_நிலையம்&oldid=848266" இலிருந்து மீள்விக்கப்பட்டது