பேச்சு:யெர்ராவாரிபாலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் இரண்டு rr இருப்பதால் யெர்ராவாரிபாலம் என எழுதப்பட்டுள்ளதா, அல்லது உள்ளூர் மொழியில் அப்படித்தான் ஒலிக்கிறதா?--Kanags \உரையாடுக 07:08, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

தெலுங்கில் ’ர்ர’ என்றே எழுதுகின்றனர். றகரத்தை ”ர்ர” என்று எழுதுவது தற்கால தெலுங்கு வழக்கம். அது தமிழ்ப் பெயராக இருப்பின் றகரம் போட்டு எழுதுவேன். இல்லாவிடில் தெலுங்குமுறையை பின்பற்றுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:23, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
விளங்கவில்லை, தெலுங்குப் பெயர்ப்பில் எழுதுவதானால், (அவர்கள் ற வை ர்ர என எழுதுகிறார்கள் என்பதால்) அது யெர்ராவாரிபாலம் என இருக்கும், தமிழ் முறைப்படி எழுதுவதானால் யெறாவாரிபாலம் என வருமா? அப்படியானால் தமிழ் முறைப்படித் தானே எழுத வேண்டும்?--Kanags \உரையாடுக 07:33, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
தமிழில் றகரம் கொண்டு எழுதும் பாரம்பரியச் சொற்களை தற்காலத் தெலுங்கில் ர்ர என்று எழுதுகின்றனர். ர்ர=ற என கருதுகின்றனர் போலும். தமிழல்லாத, பிற மூலம் கொண்ட தெலுங்கு சொற்களிலும் ”ர்ர” என்று வருவதுண்டு. தமிழ்ச் சொல்லாக இருப்பின் தமிழுக்கு ஏற்ப எழுதுகிறேன். யெர்ர, குர்ர,மர்ர போன்ற சொற்களுக்கு தமிழ் மூலம் இருப்பதாக தெரியவில்லை. எனவே, அவற்றை ”ர்ர” என்றே எழுதுகிறேன். எடுத்துக்காட்டாக, தெலுங்கில் நெர்குண்ட்ரம் என்று எழுதியிருந்தால், அதை நெற்குன்றம் என தமிழுக்கு ஏற்ப எழுதுவேன். யெர்ரங்கொண்டா என வந்தால் உள்ளவாறே எழுதுகிறேன். றகரம் நாக்கில் அழுத்தம் தந்தே ஒலிக்கப்படும். முறையாக எழுதினால் றகரம் சரியானதாகவும், ”ர்ர” தமிழுக்கு ஏற்கப்படாததாகவும் கொள்ளப்படும். ஆனால், றகரத்தை தற்காலத்தில் ர என ஒலித்துப் பழகிவிட்டனர். யெறம் என்று எழுதினால் யெரம் என்றே படிப்பர். ”ர்ர” என்ற அழுத்தம் வராது. தெலுங்கு முறைப்படியே இருக்கலாம். வேண்டுமானால வழிமாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:47, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யெர்ராவாரிபாலம்&oldid=1739398" இலிருந்து மீள்விக்கப்பட்டது