பேச்சு:மெட்ரோஜெட் விமானம் 9268

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


டகர மெய்யை அடுத்து ரகரம் வருவது பிழை. மெட்ரோ என்று எழுதுவது இலக்கணக் குற்றம். அதனால் குறைந்த பட்சம் அதுவேனும் சரியாக இருக்கட்டுமேயென்று நகர்த்தியதை ஏன் மீண்டும் முன்னிருந்தவாறு மாற்றப்பட்டுள்ளதென்பது புரியவில்லை.--பாஹிம் (பேச்சு) 04:08, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மெட்ரோ என்பதே தமிழக வழக்கு. மெற்றோ என்பதை எவ்வாறு உச்சரிப்பது? Metto என்றா?--Kanags \உரையாடுக 04:57, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பெற்றோர் என்பதை pettar என்றா உச்சரிக்கிறீர்கள்? கற்றோர் என்பதை kattor என்றா உச்சரிக்கிறீர்கள்? நான் இங்கே தமிழக வழக்கு, இலங்கை வழக்கு என்றெதுவும் கூறவில்லை. எல்லோருக்கும் பொதுவான இலக்கணத்தைக் கூறினேன். அது தவறா?--பாஹிம் (பேச்சு) 05:16, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Metro - மெட்ரோ, Petrol - பெட்ரோல், பெட்ரோலியம் எனத் தமிழ்நாட்டினர் எழுதுவது தவறென்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 05:26, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மெட்ரோ என்று எழுதுவது இலக்கணக் குற்றம்.--பாஹிம் (பேச்சு) 13:32, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]