பேச்சு:மீண்டெழும் பாண்டியர் வரலாறு (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகச் சிக்கலான தலைப்பை அருமையாக எழுதி நடுநிலையுடன் பதிந்த நக்கீரனுக்கு நன்றிகள் பல.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:49, 27 மே 2014 (UTC)[பதிலளி]

இந்த நூல் இணையத்தில் எங்காவது கிடைக்கப் பெறுமா? சிங்கப்பூரிலோ இலங்கையிலோ கிடைக்கப் பெற்றாலும் நல்லது.--பாஹிம் (பேச்சு) 00:58, 6 மார்ச் 2015 (UTC)

இல்லை. தமிழகத்தில் தடை உள்ளதால் நூலுக்கு முகவுரை எழுதியவர்களிடம் கொடுக்கப்பட்ட நூல்கள் மட்டுமே உள்ளன. பாராட்டுறைகள் முகநூலில் உண்டு. அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பாராட்டித்தான் எழுதியுள்ளனர்.

//இந்த நூலை விற்பனை செய்வது, மறுபதிப்புச் செய்வது, மொழிமாற்றம் செய்வது இதனால் தடைபட்டுள்ளது.//

இதை மறுபதிப்பு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் தமிழகம் வந்தீர்கள் என்றால் உங்களுக்கு செந்தில் மள்ளர் சார்தவர்கள் நூல் பிரதி ஒன்றை கொடுக்க வாய்ப்புள்ளது. எனக்கு பாராட்டுரைகளை பார்த்த போது செந்தில் மள்ளரிடம் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் நான் இந்த நூல் தடையை எதிர்ப்பவன். காரணம் நாடார், வேளாளர் (24 சாதிகள்), முக்குலத்தோர் (7 சாதிகள்), வன்னியர், மீனவர் (7 சாதிகள்) தாங்கள் தான் பாண்டியர்கள், முவேந்தர், வேளிர் என எழுதியுள்ளனர். அதிலும் மற்ற சமூகங்களை குறைத்து தான் எழுதியிருப்பர். ஆனால் பள்ளருக்கு மட்டும் தடை என்பது நூலுக்கு பாராட்டுரை எழுதிய மற்ற சமூதாயங்களை கூட புருவம் தூக்க வைத்துள்ளது. பல அரசியல் சிக்கல் இருக்கு. மற்ற நாட்டில் மொழிபெயர்ப்பு செய்வதில் இந்திய தமிழக அரசாங்கம் மூக்கை நுழைக்க முடியாது என நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு செய்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:51, 6 மார்ச் 2015 (UTC)

இங்கே நிகழ்ந்திருப்பது ஒரு வகையான சாதீய அடக்குமுறை என்றே தோன்றுகிறது. நூலைப் பெற்றுக் கொள்ள முடிந்தால் இந்தியாவுக்கு வெளியிலிருந்து மொழிபெயர்க்கவும் இணையத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கவும் முடியும். இந்தியச் சட்டம் வேறு நாடுகளில் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறே, தில்லி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம் பற்றிய ஆவணப்படத்தை இந்திய அரசாங்கம் தடை செய்து விட்டதால் அதனால் எதுவும் செய்ய முடியாது. அதன் செய்தி சென்றடைவது மிக முக்கியமாகக் கருதப்படுவது இந்தியரல்லாதோருக்கே. அப்போதுதான் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நிலை வெளிநாடுகளில் வெட்ட வெளிச்சமாகும். அதனையும் வேண்டுமானால் ஏதாவதொரு வெளிநாட்டில் மொழிபெயர்க்கவும் வெளியிடவும் செய்யலாம்.--பாஹிம் (பேச்சு) 13:03, 6 மார்ச் 2015 (UTC)

சொந்த வரலாற்றினை அறியாமல், மேற்கத்திய ஆளுமைகள் அறிந்து அவற்றை பாராட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் அரிய முயற்சியாக நடைபெரும் செயல்களையும் முடக்கிவிடுகிறார்கள்.. :-( --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:26, 6 மார்ச் 2015 (UTC)