பேச்சு:மீக்கடத்துதிறன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பைச் சற்று மாற்றவேண்டும் என நினைக்கிறேன். கடத்து என்பது வினை. கடத்துதிறன் என்பது வினைத்தொகை. வலிமிகுத்து கடத்துத்திறன் என எழுதுதல் பிழை. கடத்தல் என்னும் பெயரை முன்னொட்டாகக் கொண்டு எழுதலாம். தஞ்சைப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி இதனை மீக்கடத்தத்திறன் எனக் குறிக்கின்றது. அதனால், இப்பக்கத்தை மீக்கடத்துதிறன் அல்லது மீக்கடத்தத்திறன் என மாற்றவேண்டும். -இரா. செல்வராசு (பேச்சு) 22:32, 27 மே 2017 (UTC).[பதிலளி]

நானும் அவ்வாறுதான் நினைத்தேன். தேவையற்ற ஒற்று சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் மீக்கடத்துதிறன் என்பதை முதன்மையாக்கலாம்.--Kanags \உரையாடுக 23:05, 27 மே 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீக்கடத்துதிறன்&oldid=2295060" இலிருந்து மீள்விக்கப்பட்டது