பேச்சு:மஞ்சள் நீர் விளையாட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது விழாக்களின் போது நடைபெறும் விளையாட்டு. (முதல் மேற்கோள்)

கோவிலில் நடைபெறும் மஞ்சள் நீராட்டு என்பது அக்கோவிலில் எழுந்தருளியுள்ள கடவுளுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்விப்பது. (2, 3வது மேற்கோள்கள்)

இவ்விரண்டையும் ஒன்றாகத் தருவது சரியில்லை எனத் தோன்றுகிறது. தெளிவு கருதி கட்டுரை சற்று மாற்றப்பட வேண்டும்.--Booradleyp (பேச்சு) 04:07, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

கோவில்களில் கடவுளுக்கு அபிஷேகம் செய்வது மஞ்சல் நீராட்டு அல்ல. மேற்கோள்கள், கோவில் திருவிழாவின் போது நிகழும் மஞ்சள் நீராட்டு விழாவை குறிக்கிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:46, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

முதல் இரண்டு மேற்கோள்கள் மனிதர்கள் விளையாடிக் கொள்வதைச் சுட்டுகின்றன. ஆனால்,

மூன்றாவது மேற்கோள் -அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா என்றும், நான்காவது மேற்கோள் -இறுதி நாளன்று மஞ்சள் நீராட்டு விழா என்றுதான் சுட்டுகின்றன.

ஆம். அம்மன் திருவிழாவின் போதும் இந்நிகழ்வு ஏற்படும். 16 வயதினிலே மற்றும் வெண்ணிலா கபடிக் குழு போன்ற திரைப்படங்களில் இந்நிகழ்வு காட்டப்பட்டுள்ளது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:59, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
இதில் மூன்று வகை விடய்ங்கல் இருப்பது போல் தெரிகின்றது.
  1. . சிலைகள் அல்லது சொரூபங்களுக்கு மஞ்சள் அபிசேகம் செய்தல்
  2. . தீமிதிப்புக்கு முன் பக்தர்கர்கள் மஞ்சள் குளிப்பது
  3. . விழாக்களில் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் மற்றும் நிற சாயங்களால் குளிப்பாட்டுவது

மூன்றும் தனித்தனி விடயங்களாக எழுதப்படவேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:26, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 05:41, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
இம்மூன்று விடயங்களில், மூன்றாவதைத் தான் மஞ்சள் நீராட்டு என்று கூறுவார்கள். மற்றவற்றிற்கு இரண்டிற்கும் வேறு பெயர்கள் உள்ளன. இந்த மஞ்சள் நீராட்டு குறித்து இன்னும் சிலவிடயங்கள் விரைந்து எழுதுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:01, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தினேஷ், நீங்கள் இப்பொழுது தந்துள்ள பக்கத் தலைப்பு, மஞ்சள் நீர் விளயாட்டு என்பதே இக்கட்டுரைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.--Booradleyp (பேச்சு) 15:45, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மஞ்சள் நீராட்டு என்பதற்கு திருத்தமான வரையறை ஏதும் இல்லை போலும் இலங்கையில் பூப்புனித நீராட்டினை கூட மஞ்சள் நீராட்டு என்று கூறக் கேட்டிருக்கிறேன், கட்டுரையில் இவற்றை பற்றி தனித்தனியை குறிப்பிடலாம்.--சங்கீர்த்தன் (பேச்சு) 15:16, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஓரளவிற்கு பிணக்குகளை, கட்டுரையை விரிவாக்குவதன் மூலமாகவும், தலைப்பை சரிசெய்தும் தீர்த்துள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:04, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]