பேச்சு:மங்கல இசை மன்னர்கள் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய நாதசுவர, தவிற் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த நூலுக்கு குறிப்பிடத்தக்கமை இருக்கிறது. பல ஆண்டுகள், பல்வேறு ஊர்களுக்கு பயணித்து, பலரை சந்தித்துப் பேசி, வரலாறுகளை திரட்டி ஆசிரியர் எழுதியிருக்கிறார். காட்டப்பட்டுள்ள மேற்கோள் இணைப்பில் உள்ள புத்தக மதிப்புரையை படித்துப் பார்த்தால், இந்தக் கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையை அறியலாம். மேற்கொண்டு கூடுதல் மேற்கோள்கள் காட்ட முயற்சிக்கிறேன். அதற்குப் பிறகும் கலைக்களஞ்சியத்தில் இருக்கக்கூடிய தகுதி இக்கட்டுரைக்கு இல்லை எனக் கருதினால், தாராளமாக நீக்கிக் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:04, 23 பெப்ரவரி 2017 (UTC)

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) - இதற்கு ஏற்ப குறிப்பிடத்தக்கமையை நிலைநாட்டலாம். இதற்குப் புறப்பான உரையாடல்களில் கலந்து கொள்வதை விரும்பவில்லை. --~AntanO4task (பேச்சு) 05:55, 23 பெப்ரவரி 2017 (UTC)

நம்பத்தக்க கூடுதல் மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளன. @Uksharma3:, @Kanags: ஆகியோருக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:32, 24 பெப்ரவரி 2017 (UTC)

@~AntanO4task: குறிப்பிடத்தக்கமையை நிலைநாட்டும் வகையில் கூடுதல் மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளன. கவனித்து உரியன செய்யவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:47, 25 பெப்ரவரி 2017 (UTC)

இசை உலகின் முக்கிய ஆவணமாக இந்த இசை வரலாற்று நுால் கருதப்படுகிறது என்பது முக்கிய குறிப்பாகும். ஆனால், இக்குறிப்பை எழுதிய கட்டுரையாசிரியர் யார்? 1 ஆம் உசாத்துணை நூலாசிரியராலேயே எழுதப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இந்த 1 ஆம் உசாத்துணை முக்கிய இடங்களுக்கு சுட்ட முடியாது. எ.கா: இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகவும், வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது. மேலும் இக்குறிப்பிற்கு வலிந்து ஒரு உசாத்துணை சேர்க்கப்பட்டுள்ளது. --~AntanO4task (பேச்சு) 06:38, 26 பெப்ரவரி 2017 (UTC)
இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகவும், வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது. என்பதற்கு மேற்கோள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையை எழுதிய லலிதாராம் ஒரு பிரபல இசை விமர்சகர் என்பது தெரிந்ததே. அந்த விமர்சனக் கட்டுரையின் சாரத்தை வைத்தே மேலே குறிப்பிட்ட வரி எழுதப்பட்டது ("(நாகஸ்வர - தவிற் கலைஞர்களைப் பற்றிய) ‘மங்கல இசை மன்னர்களும்’, (பரதநாட்டிய கலைஞர்களைப் பற்றிய) ‘மரபு தந்த மாணிக்கங்களும்’ கலைத் துறையைப் பொருத்தமட்டில் மைல்கற்கள்." என அவர் எழுதியிருப்பதைப் படிக்கவும்). --UKSharma3 01:03, 27 பெப்ரவரி 2017 (UTC)
@~AntanO4task:
  1. இசை உலகின் முக்கிய ஆவணமாக இந்த இசை வரலாற்று நுால் கருதப்படுகிறது என்பதற்குத் தரப்பட்ட மேற்கோளை வெளியிணைப்பாக மாற்றியிருக்கிறேன்
  2. நூலாசிரியராலேயே எழுதப்பட்டுள்ள 1 ஆம் உசாத்துணையை வெளியிணைப்பாக மாற்றியுள்ளேன்.
  3. வரலாறு.காம்-மேற்கோள் பக்கத்தில் சொல்லப்பட்டவாறு கட்டுரையின் உள்ளடக்கதை மாற்றி நீங்கள் இட்டிருந்த [not in citation given] குறிப்பை நீக்கியிருக்கிறேன்.

கட்டுரையின் குறிப்பிடத்தக்கதன்மைக்குத் தேவையான நிலை எட்டப்பட்டது எனில் வார்ப்புருவை நீக்கிவிடலாமா? உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:29, 27 பெப்ரவரி 2017 (UTC)

@Selvasivagurunathan m:, @Uksharma3: இந்நூல் முக்கியமான நூல்தான் என்பதில் ஐயமில்லை. என்றாலும் விக்கிக் கொள்கைக்கேற்ப குறிப்பிடத்தக்கமைக்கான அளவுகள் அதில் அமைந்துள்ளதா என்பதுதான் இங்கு சிக்கல். என்னால் முடிந்தவரை விக்கிதரத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்திருக்கிறேன். உங்கள் இருவரது மூல வாக்கியங்கள் சிலவற்றை இதற்காக மாற்ற வேண்டி நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். --Booradleyp1 (பேச்சு) 07:29, 27 பெப்ரவரி 2017 (UTC)

@Booradleyp1: உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். இசை ஆர்வலர்களுக்கு, குறிப்பாக நாகஸ்வர, தவில் வாத்திய கலைஞர்களுக்கு இது ஒரு பொக்கிசமாகக் கருதப்பட வேண்டிய நூல். விக்கியில் நூற்றுக்கணக்கான குறுங்கட்டுரைகள் படித்து விளங்கக்கூட முடியாத மொழி நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு ஒரு வார்ப்புருவையும் யாரும் இடவில்லை. சில மாதங்களுக்கு முன்னால் வெளியிடப்படாத, தயாரிக்கப்படாத ஒரு பழைய தமிழ்த் திரைப்படம் பற்றிய கட்டுரையைக் கண்டேன். வரலாற்றைப் பார்த்தபோது 9 ஆண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பட்ட கட்டுரை என்றும் பலர் அதில் தொகுப்புகள் செய்திருந்தார்கள் என்றும் கண்டேன். ஆனால் அத்தனை ஆண்டுகளாக ஒருவர் கூட அப்படி ஒரு படம் வெளிவந்ததா என்பதை verify செய்யவில்லை. அக்கட்டுரையில் மேற்கோளும் இருக்கவில்லை. ஆயினும் ஒரு வார்ப்புருவும் இல்லை. பின்னர், நான் சுட்டிக்காட்டியதன் பேரில் கனக்ஸ் அந்தக் கட்டுரையை நீக்கினார். ஆனால் இந்த ஒரு ஒரு அரிய நூல் பற்றிய கட்டுரைக்கு இவ்வளவு 'நெருக்கடி' ஏற்பட்டது கவலைக்குரியது. 'Team Work' என்ற முறையில் நீங்கள் நேரமும் முயற்சியும் எடுத்து கட்டுரையை மாற்றியமைத்துள்ளீர்கள். 'விக்கி தரம்' என்ன என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் மாற்றங்கள் நிர்வாகிகளைத் திருப்தி செய்யும் வகையில் இருக்கும் என நம்புகிறேன். நன்றி. வணக்கம். --UKSharma3 00:19, 28 பெப்ரவரி 2017 (UTC)
@Booradleyp1: தேவையான தொகுப்புக்களுக்கு நன்றி. விக்கிக் கொள்கைக்கேற்ப குறிப்பிடத்தக்கமைக்கான அளவுகள் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டமைக்கும் மிக நன்றி. --~AntanO4task (பேச்சு) 03:30, 28 பெப்ரவரி 2017 (UTC)