பேச்சு:பௌத்தநாத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழ் இலக்கணப்படி பௌத்தநாத்து என்று இருக்க வேண்டும். வல்லின ஒற்றில் ஒரு சொல் முடியக்கூடாது. இயற்கையாகவும் கடைசி தகர ஒற்றை அதனை அடுத்து ஓர் உயிரொலி வராமல் ஒலிக்கவும் முடியாது. எனவே பௌத்தநாத்து என மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 20:31, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Nath என முடியும் அனைத்துச் சொற்களையும் நாத்து என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 01:41, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆம் மாற்றவேண்டும். வல்லின ஒற்றில் ஒரு சொல் முடியலாகாது. உண்மையில் ஒலிக்கவும் முடியவே முடியாது. மாற்றாவிட்டால் இலக்கணச்சிக்கல்களும் தரும்.--செல்வா (பேச்சு) 01:53, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
அவ்வாறே Singh - சிங்கு என வர வேண்டும். மன்மோகன் சிங்கு.--Kanags \உரையாடுக 21:16, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆம், சிங்கு என்றுதான் வருதல் வேண்டும். திரு மன்மோகன் சிங்குடன் திரு மோதீ சந்தித்தார் என்றுதான் எழுதமுடியும். திரு மன்மோகன் சிஙுடன் திரு மோதீ சந்தித்தார் என எழுதுவதில்லை. --செல்வா (பேச்சு) 21:43, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
இயற்கையாகவே "நாத்து" என்று உச்சரிப்பதும் "நாத்" என்று உச்சரிப்பதும் ஒன்றல்ல என்பது சர்வதேச ஒலிப்பியல் முறை. மண் என்பது உருபு சேரும் போது "மண்ணோடு" என்று சாரியை ஏற்பது போல உருபோடு சேரும் போது "சிங்கோடு" அல்லது "பௌத்தநாத்தோடு" என்று வருவது இயல்பு. அதை உதாரணமாகக் கொண்டு பௌத்தநாத்து என்று பெயரிடுவது பயன்குன்றியது என்பது எனது கருத்து. அதை மீறி மக்களுக்கு இத்தலைப்பு புரிந்தால் மகிழ்ச்சியே-நீச்சல்காரன் (பேச்சு) 07:57, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பௌத்தநாத்து&oldid=1973763" இலிருந்து மீள்விக்கப்பட்டது