பேச்சு:பேராலவாயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். 'பேராலவாயர்' என்னும் புலவர் பெயரைப் 'பேராலவாயார்' என மாற்றியுள்ளீர்கள். 'பேராலவாய்' என்பது ஊரின் பெயர். பெரிய ஆலமரம் இருந்த ஊர். இவ்வூரில் வாழ்ந்தவர் பேராலவாயர். 'பேராலவாயார்' என்றால் பெரிய ஆலமரம் போன்ற வாயினை உடையவர் எனப் பொருளாகிவிடும். சிறந்த பதிப்புகளில் உள்ள பழந்தமிழ்ப் பெயர்களை உங்களுக்குத் தெரிந்த தமிழால் உங்கள் விருப்பம் போல் திருத்தாதீர்கள்.

  • தாங்களே 'பேராலவாயர்' என்ற பழந்தமிழ்ப் பெயருக்கு, வரலாற்றுப் பொருள் பொதிந்த பெயருக்கு மாற்றிவிடுங்கள்.
  • பேசுங்கள் என்று பலமுறை கெஞ்சியிருக்கிறேன்.
  • என்னை மதிக்கவேண்டாம்.
  • தமிழை மதியுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:33, 8 ஏப்ரல் 2013 (UTC)
தவறுக்கு மன்னிக்கவும். நான் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனை பற்றி படித்த போது "சங்க கால அரச வரலாறு" நூலில் பேராலவாயார் என்ற பெயர் இருந்தது. இக்கட்டுரையின் உட்பக்கத்திலும் பேராலவாயார் என்று இருந்தது. அத்னால் இது எழுத்துப்பிழையோ என்று நினைத்து மாற்றினேன். தக்கது எதுவோ அதைச் செய்யலாம்.

தமிழ் நிகர்நிலைப்பல்கலைக்கழகத் தளத்திலும் பேராலவாயார் என்றே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:40, 10 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேராலவாயர்&oldid=1399063" இலிருந்து மீள்விக்கப்பட்டது