பேச்சு:பெரிப்ளசு காட்டும் தமிழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிப்ளஸ் என்பது நபரல்ல. அதை எழுதியவர் பெயர் தெரியாதலால் அப்படி கூறுகின்றனர். எரிதிரியக்கடல் பெரிப்ளூசுக்கு ஏற்கனவே கட்டுரை உள்ளது. செங்கடல் செலவு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:24, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

  • கட்டுரை உள்ளது. பார்த்தேன். இருக்கட்டும்.
  • பெரிப்ளஸ் என்பது நூலின் பெயர். நன்னூல் எழுதியவர் பவணந்தி முனிவர். அவரது பெயர் தெரிந்ததிருந்தும் அவரை நன்னூலார் என்கிறோம்.
  • செங்கடல் செலவு என்னும் கட்டுரையோடு இந்தக் கட்டுரையை இணைக்கும் நோக்கோடு இந்தக் குறிப்பு தரப்பட்டிருந்தால் அக்கட்டுரையின் விரிவாக்கப் பணியை தாங்களே தொடரலாம். எனது விரிவாக்கப் பணியை நிறுத்திக்கொள்கிறேன்.
  • விக்கி என்னுடையதோ, உங்களுடையதோ அன்று. நம்முடையது. தமிழுக்காக விக்கியை விட்டுவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:30, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

செங்கடல் செலவு கட்டுயில் உள்ள செயதிகளை ஆங்கிலத்தில் உள்ள செய்திகளோடு ஒப்பிட்ட பின்னர் முடிவுக்கு வாருங்கள். மேலும் விளக்கம் என் பேச்சுப்பகுதியில் உள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 22:31, 22 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பெரிப்ளசு பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 22:48, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தீர்ப்பு[தொகு]

தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

பெரிப்ளசு கண்ட தமிழகம் என்னும் தலைப்பு பெரிப்ளசை எழுதியவர் நேரில் வந்து தமிகத்தை கண்டார் என்பது போல் உணர்த்துவதால் செங்கடற் செலவில் தமிழகம் என்றோ பெரிபளசில் தமிழகம் பற்றிய குறிப்புகள் என்றோ பெயர் மாற்றம் செய்யலாம். நாடுகான் பயனிகளான மெகசுதனீசு, உவான் சுவான், மார்க்கோ போலோ, வாசப்பு போன்றவர்களுக்கு மட்டுமே xxxx கண்ட தமிழகம் என்னும் தலைப்பு பொருந்தும். இக்கட்டுரை முதற்பக்க தரத்துக்கு இருப்பதால் உடனடி தலைப்பு மாற்றம் அவசியமாகிறது.

\\இவர் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் பாய்மரக் கப்பலில் கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தார்.\\

மேலுள்ள வாக்கியத்துக்கான மேற்கோள்கள் இரண்டில் ஒன்று ஆங்கிலக்கட்டுரைக்கும் மற்றொன்று பதியப்படாத இரண்டாம் நிலை மூலமாகவும் இருக்கின்றன. அதனால் அவ்வாக்கியத்தையும் நீக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:16, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]