பேச்சு:புதிய தமிழ்ப் புலிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தனிக் கட்டுரையாக இருப்பதற்கான எத்தகுதியும் இருப்பதாகக் காணப்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடக்கம் இது. அவர்கள் தொடங்கிய போது ஒரு பெயரிட்டுத் தொடங்கி, பின்னர் பெயரை மாற்றியுள்ளார்கள். எந்த ஒரு நிறுவனத்துக்காகவும் முன்னைய பெயருக்கு ஒரு கட்டுரையும் பின்னைய பெயருக்கு மற்றொரு கட்டுரையும் எழுதப்படுவது ஏற்க முடியாதது. இங்கே ஆதாரம் எதுவும் சுட்டப்படவுமில்லை. எனவே, இப்பக்கத்தை நீக்கி, இதிலிருந்து முக்கியமான தகவல்களை மாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுரையுடன் இணைக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 03:33, 2 மார்ச் 2019 (UTC)

 எதிர்ப்பு இது ஆரம்பகாலக் கட்டுரைகளில் ஒன்று. தனித்திருப்பதற்குப் போதிய தகவல்களும் வரலாறும் உண்டு. இவ்வாறான வரலாற்றுக் கட்டுரைகள் தனித்திருப்பதே சரியானது. ஆங்கில விக்கியிலும் வெவ்வேறான கட்டுரைகள் உள்ளன. ஒரே கட்டுரையாக இருப்பதற்கு இது ஒன்றும் வணிக நிறுவனமல்ல. பெயர் மாற்றப்பட்ட சில அரசியல் கட்சிகளுக்கு த--பாஹிம் (பேச்சு) 08:12, 4 மார்ச் 2019 (UTC)னித்தனியே கட்டுரைகள் உள்ளன.--Kanags (பேச்சு) 06:43, 4 மார்ச் 2019 (UTC)

இப்போதும் இதற்குத் தனிக்கட்டுரையாக இருக்குமளவுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படவில்லை; இதன் வரலாறு பற்றிய பிரிவில் வழங்கப்பட்டுள்ள எதற்கும் ஆதாரம் வழங்கப்படவுமில்லை. இது ஏன் தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும்? அந்தளவுக்கு இதற்குரிய முக்கியத்துவம் என்ன?--பாஹிம் (பேச்சு) 07:26, 4 மார்ச் 2019 (UTC)

ஈழத்தமிழரின் வரலாற்றை அழிப்பதே உங்கள் முக்கிய நோக்கம் எனத் தெரிகிறது. இதனைப் பல முறை உங்கள் எழுத்துகள் எடுத்துக்காட்டியுள்ளன. ஆதாரம் தான் முக்கியமென்றால், அதனைத் தருவோம். அதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. நூலகத்தில் ஏராளமாக உள்ளன.--Kanags (பேச்சு) 07:41, 4 மார்ச் 2019 (UTC)

ஈழத்தமிழரின் வரலாற்றை அழிப்பதே உங்கள் முக்கிய நோக்கம் எனத் தெரிகிறது என்று வீண் பழி சுமத்துகிறீர்கள். எனக்கு அப்படி ஒரு நோக்கமும் கிடையாது. நான் கேட்ட கேள்விகள் இது ஏன் தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும்? அந்தளவுக்கு இதற்குரிய முக்கியத்துவம் என்ன?--பாஹிம் (பேச்சு) 07:51, 4 மார்ச் 2019 (UTC)

@Fahimrazick: கட்டுரையில் மூன்று மேற்கோள்கள் உள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் ஆதாரம் எத்தகையது? எத்தகைய கூடுதல் ஆதாரங்களை முன்வைத்தால் இது தனிக்கட்டுரையாக இருக்கத் தகுதியுடையது என்று ஏற்றுக் கொள்வீர்கள்? முதன்மைக் கட்டுரையின் அளவு பெரிதாக இருக்கும் போது, உட்பிரிவுகளை விரித்துத் தனிக்கட்டுரையாக எழுதுவது ஏற்புடையது தான்.
@Kanags: நூலகத்தில் கூடுதல் ஆதாரங்கள், செய்திகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை இணைக்க வேண்டுகிறேன். தனிப்பட்ட உள்நோக்கங்களைக் கற்பிப்பது ஆக்க முறையில் உரையாடலை நகர்த்திச் செல்ல உதவாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இது போல் ஒரு அமைப்பின் தொடக்கக் காலத்துக்குத் தனிக்கட்டுரை இருக்கிறதா என்றும் தேடிப் பார்க்கலாம். அப்படி இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தேவையான விதிவிலக்குகளையும் நாம் உருவாக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 08:07, 4 மார்ச் 2019 (UTC)

நான் கேட்டது ஆதாரங்களையல்ல. அதனை இரண்டாம் பட்சமாகத்தான் கூறியிருக்கிறேன். நான் முக்கியமாகக் கேட்ட கேள்விகளை இங்கு மீண்டும் இடுகிறேன். இதற்கான நியாயமான பதிலைத்தான் எதிர்பார்க்கிறேன். இது ஏன் தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும்? அந்தளவுக்கு இதற்குரிய முக்கியத்துவம் என்ன?

@Fahimrazick: இது 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பிற்கான கட்டுரை. தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுரை 1976 ஆம் ஆண்டு இதன் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அமைப்பிற்கான கட்டுரை. இதன் வரலாறு வேறு, அதன் வரலாறு வேறு, இந்த இரண்டு வரலாற்றையும் ஒன்றாக இணைத்து தான் கட்டுரை எழுத வேண்டும் என அவசியம் ஏதும் உள்ளதா??--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:41, 4 மார்ச் 2019 (UTC)

1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு 1976 ஆம் ஆண்டு பெயரை மாற்றிக் கொண்டுள்ளது. பெயரை மாற்ற முன்னர் இது முக்கியத்துவமடையுமளவுக்கு எக்குறிப்பிடு தகைமையும் இருந்ததில்லை. அரசாங்க வங்கியிலிருந்து கொள்ளையடிடத்ததாம், ஒருவரைக் கொலை செய்ததாம். இதுதான் இதற்குரிய முக்கியத்துவமா? அப்போதிருந்தும், அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கு இந்தப் பெயரில் உரிமை கோரப்பட்ட வரலாறு கிடையவே கிடையாது. விடுதலைப் புலிகளாகத்தான் உரிமை கோரப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க இது தனிக்கட்டுரையாக இருக்குமளவுக்கு உள்ள முக்கியத்துவம் என்ன?--பாஹிம் (பேச்சு) 09:12, 4 மார்ச் 2019 (UTC)