பேச்சு:பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bretschneider's formula என்பதை பிரெட்ஷ்ணைடர் வாய்பாடு என்று எழுதலாம். அதாவது இடாய்ச்சு மொழியில் ei என்று வந்தால் ஐ என்பது போலவும் ie என்று வந்ததல் ஈ என்பது போலவும் ஒலிக்க வேண்டும். மற்றொன்று வாய்பாடு என்று ப் இல்லாமல் வரவேண்டும். ஒலிக்க சற்றே எளிதாக்கி பிரட்சினைடர் என்றோ பிரட்சிணைடர் என்றோ சொல்லலாம். பிரட்சிணைடர் என்றும் மூன்று சுழி ணகரம் இட்டுச் சொல்வது மிகவும் நெருக்கமான ஒலியாக இருக்கும் என்பது என் கருத்து. பிரட்சிணைடர் வாய்பாடு என்று இதன் தலைப்பை மாற்றலாமா? --செல்வா 12:11, 7 பெப்ரவரி 2012 (UTC)

"பிரெட்ஷ்ணைடர் வாய்பாடு" என்று மாற்றலாம். ”பிரட்சிணைடர்” என்று மாற்ற எனக்கு உடன்பாடில்லை. தனிமனிதர்களின் பெயரை மாற்ற எனக்கு விருப்பமில்லை.--Booradleyp 13:23, 7 பெப்ரவரி 2012 (UTC)
நீங்கள் விரும்பியவாறே மாற்றியிருக்கின்றேன். ஆனால் நீங்கள் கூறுவது போல தனிமனிதர் பெயரை மாற்றுவது அல்ல இது. வழங்கும் மொழியின் இயல்புக்கு ஏற்ப மாறுவது மொழிக்கு மொழி நிகழும் ஒன்று. Bretschneider என்பதில் உள்ள மெல்லொலி பகரம் மாறவில்லையா என்பதனை நீங்கள் கருதவேண்டும். தமிழ் மொழியின் வழக்கத்தின் படி மெய்யெழுத்தில் தொடங்காமல் பி என்று தொடங்கவிலலையா? இவற்றைப்பற்றி இப்பொழுது இங்கு மேலும் உரையாடவேண்டுமென்பது என் நோக்கம் அன்று. ஆனால் இக்கருத்தைப் பதிவது தேவை என்று கருதி இடுகின்றேன்.--செல்வா 14:15, 7 பெப்ரவரி 2012 (UTC) தட்சிணாமூர்த்தி, இலட்சணம், வரதட்சிணை/வரதட்சணை என்பதையும் நினைவில் கொள்ளலாம் (மீண்டும் இவை இப்பொழுது கருத்துப் பதிவாக இருக்கவே). --செல்வா 17:27, 7 பெப்ரவரி 2012 (UTC)

//Bretschneider என்பதில் உள்ள மெல்லொலி பகரம் மாறவில்லையா என்பதனை நீங்கள் கருதவேண்டும். தமிழ் மொழியின் வழக்கத்தின் படி மெய்யெழுத்தில் தொடங்காமல் பி என்று தொடங்கவிலலையா? //

Bரெட்ஷ்ணைடரின் வாய்பாடு என்று எழுதுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம் :)--இரவி 15:29, 8 பெப்ரவரி 2012 (UTC)