பேச்சு:பிரானா மீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதாரங்களை ஆங்கில விக்கியிலிருந்து பெற வேண்டியுள்ளது. வழிமுறை தெரியாது. உதவுவீர்களா?--P.M.Puniyameen 10:20, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

உதாரணத்துக்கு ஒரு மேற்கோள் வாழுமிடம் பகுதியில் சேர்த்திருக்கிறேன். பாருங்கள். <ref name="Freeman">{{cite journal|url=http://www.mapress.com/zootaxa/2007f/zt01484p038.pdf|title=Molecular systematics of Serrasalmidae: Deciphering the identities of piranha species and unraveling their evolutionary histories|first=Barbie|last=Freeman|coauthors=Nico, Leo G.; Osentoski, Matthew; Jelks, Howard L.; Collins, Timothy M.|journal=[[Zootaxa]]|volume=1484|pages=1–38|year=2007|format=PDF|accessdate=2009-06-22}}</ref>

இவ்வாறு தேவையான இடத்தில் சேர்த்து விட்டு, கட்டுரையின் முடிவில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணை பகுதியில் <references/> என்பதைச் சேர்த்து விடுங்கள். இதே மேற்கோளை இதே கட்டுரையில் வேறொரு பகுதியில் சேர்க்க வேண்டும் என்றால் <ref name="Freeman"/> என மட்டும் எழுதினால் போதுமானது. முயன்று பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:19, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தங்களது வழிகாட்டல் குறிப்புகளுக்கு நன்றி. இருப்பினும், அவற்றை சுயமாக கிரகித்துக் கொள்வது சற்று சிரமாக உள்ளது. மேலும், பிரயோகிப்பதில் அச்சமும் ஏற்படுகின்றது. ஆங்கில விக்கியிலிருந்து மேற்கோள்கள், ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் பெற்றுக் கொள்ளும் முறை குறித்தும் படிமங்களைப் பயன்படுத்துவது குறித்தும் தகவல் சட்டங்களில் தமிழ் மொழிபெயர்ப்பை சேர்ப்பது குறித்தும் நேரடியாக ஒரு பயனரின் உதவியுடன் கற்பதே சிறப்பென கருதுகின்றேன். பயனர் சிவக்குமார் இது குறித்து உதவுவதாக என்னிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனாலும், அவர் ஏற்பட்டுள்ள சில தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தற்போதைக்கு சாத்தியப்படுமென நான் கருதவில்லை. இருப்பினும், இது குறித்து போதிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள எனக்கொரு பயனரை தொடர்புபடுத்தித் தந்தால் அவரிடம் சென்று என்னால் கற்றுக்கொள்ள முடியுமென கருதுகின்றேன். மேலும், சிவக்குமாரால் தரப்பட்ட ஒரு சில படிமங்களை வைத்துக் கொண்டே நான் சில படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றேன். அம்முறையிலும் சில தவறுகள் இருப்பது போலத் தோன்றுகின்றது. தங்கள் மூலமாக அவை திருத்தப்படுவது குறித்து நிறைவடைகின்றேன்.

கணினி தொழில்நுட்பமின்மை காரணமாக இத்தகைய முயற்சிகளில் பிழைகள் ஏற்படுமிடத்து அவற்றை தொடர்ந்தும் திருத்தி அதை சரிசெய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதேநேரம், உரிய கட்டுரையை முறைப்படி நிறைவாக தரவேற்றம் செய்துகொள்ள முடியாததையிட்டு என்னுள் மன அழுத்தமும் உண்டு. நான் கற்றுக் கொள்ளும் வரை தங்களது உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்த்து நிற்கின்றேன். நன்றி--P.M.Puniyameen 06:37, 19 சனவரி 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரானா_மீன்&oldid=670245" இலிருந்து மீள்விக்கப்பட்டது