பேச்சு:பழ. நெடுமாறன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழ. நெடுமாறன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இந்த கட்டுரைக்கும் மேற்கோள்கள் சேர்த்தால் நல்ல கட்டுரையாக மலரும். --Natkeeran 14:45, 16 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

நடுநிலைப் பிறழ்வு[தொகு]

1)“தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்”

71 இலும் 76இலும் தமிழகக் காங்கிரசைக் கேட்டுக் கொண்டா தில்லி காங்கிரசு கூட்டணி அமைத்தது. அப்போதெல்லாம் இவருக்கு ஏகாதிபத்தியம் தெரியவில்லையா. 80 இல் காங்கிரசு திமுகவுடன் கூட்டணி என்றவுடன் (இவர் எம்ஜியார் ஆதரவாளர்) வெளியேறிவிட்டார். கருத்து வேறுபாடு வெளியேறினார் என்றால் சரியாக இருக்கும். மெலுள்ள வரிகள் அவரது அதிகாரப்பூர்வ நிலைபாட்டைத் திருப்பிச் சொல்வது போல உள்ளன.

2) மனித நேயத் தொண்டுகள் இவர் பொதுவான மனித நேய / மனித உரிமை செயற்பாட்டாளர் அல்ல. குறிப்பான அரசியல் சார்பு (தமிழ் தேசியம்) தொடர்பான விசயங்களுக்கு மட்டுமே செயல்பட்டு வருபவர்.

3)”வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டார்” --சோடாபாட்டில்உரையாடுக 19:09, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழ._நெடுமாறன்&oldid=810984" இலிருந்து மீள்விக்கப்பட்டது