பேச்சு:பள்ளிகொண்டபுரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்குறுங்கட்டுரைக்குத் தலைப்பு: பள்ளிகொண்டபுரம் (புதினம்) என்பது பொருத்தமாக இருக்கும். --Booradleyp (பேச்சு) 06:58, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

இத்தலைப்பில் உண்மையான ஊரோ வேறு புகழ்பெற்ற படைப்போ இல்லா நிலையில் பள்ளிகொண்டபுரம் என்றே இருக்கலாம்--இரவி (பேச்சு) 07:56, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
இத்தலைப்பில் உண்மையான ஊர் இருக்கிறதா இல்லையா என்று எவ்வாறு அறுதியிட்டுக் கூற முடியும்? எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு குக்கிராமம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். புதினம் என அடைப்புக்குள் இட்டுவிட்டால் இப்போதும் பின்னரும் எழக் கூடிய குழப்பங்கள் தவிர்க்கப்படலாம் என்பது எனது கருத்து. கட்டுரை விரிவாக்கம், புதினத்தைப் பற்றிய விவரங்களை அதிகம் தருவது மகிழ்ச்சி.--Booradleyp (பேச்சு) 16:23, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
எங்கோ ஒரு மூலையில் சிற்றூர் இருந்தாலும் கூட, பள்ளிகொண்டபுரம் என்ற பெயரில் இப்புதினமே பரவலாக அறியப்படுவதால் இதனை முதன்மைக் கட்டுரையாக வைப்பதில் தவறில்லை. இது வழமையான விக்கி நடைமுறையும் கூட. பள்ளிகொண்டபுரம் என்ற சிற்றூர் குறித்தோ வேறு படைப்புகள் குறித்தோ கட்டுரைகள் வரும் போது அவற்றுக்கு அடைப்புக்குறி விளக்கம் தரலாம்--இரவி (பேச்சு) 09:26, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
தலைப்பை மாற்றுவது நல்லது என்றே நானும் நினைக்கிறேன். அதில் ஏதும் தவறில்லை. பள்ளிகொண்டபுரம் இப்போதைக்கு வழிமாற்றாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:49, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
மாற்றுவதில் தவறு இல்லை. ஆனால், பரவலாக வேறு எந்த படைப்பும் ஊரும் அறியப்படாத நிலையில் இந்த மாற்றம் தேவை இல்லை--இரவி (பேச்சு) 13:09, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பள்ளிகொண்டபுரம்&oldid=1171040" இலிருந்து மீள்விக்கப்பட்டது