பேச்சு:பறம்பு மலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கிட்டிய செயுதிகளைத் திரட்டிக் கட்டுரையில் சேர்த்துள்ளேன்.
  • கல்வெட்டுச் செய்திகளில் 'பறம்பு நாடு' என்னும் பெயர் இல்லை. சான்றுகளுடன் இணைக்கப்படுதல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 22:10, 10 ஏப்ரல் 2013 (UTC)

பறம்பு நாடு என்பதற்குத் தேவையான கட்டுரைத் தரவுகள் தொகுக்கப் பெற்றுள்ளன. இணைக்க வேண்டுகிறேன்.

  1. சமயச் சிறப்பு வாய்ந்த திருவாதவூர் சைவசமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த தலமாகும். இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் – பிராமி கல்வெட்டுகளைக் கொண்ட சமணர் குகைத்தலமுள்ள குன்று ஒன்றுள்ளது. திருவாதவூர் திருமறைநாதசுவாமி கோயிலும், மடைவளாக வீதியிலும், பாசன ஏரியிலும் பிற்காலப்பாண்டியர், நாயக்கர், ஆங்கிலேயர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் பழமையானது கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரபாண்டியக் கல்வெட்டாகும். இவன் நெட்டூர் மூன்றாம் குலோத்துங்க சோழனால் முறியடிக்கப்பட்டவன். பூமருவிய திருமாதும் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் கூடிய இவனது கல்வெட்டு திருவாதவூர் சிவன் கோயிலில் (46-2003) உள்ளது. திருவாதவூர் தென்பறம்பு நாடு என்றழைக்கப்பட்ட பண்டைய உள்நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. (ஸ்ரீதர், ஸ்ரீ மதுரைக் கல்வெட்டுகள் ப.9)
  2. மேலவளவிற்கு அருகிலுள்ள பறம்புக் கண்மாய் கல்வெட்டுகள் பாசனஏரி அமைப்பதையும் நிர்வகிப்பதையும் பற்றித் தெரிவிக்கும் முக்கிய கல்வெட்டுகளாகும். இங்குள்ள சோனாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் கல்வெட்டு தென்பறம்பு நாட்டுப் பறம்பான திருநாராயண மங்கலத்துக் குளத்தின் கரையினை ஆள்வான் சக்கரக்கையன் என்பவன் உயர்த்தியதையும் அவன் உள்வாய்ப் பகுதியில் கரைகுலையாமல் (அழியாமல்) கருங்கற்கள் பதிந்து கலிங்கு அமைத்ததையும் தெரிவிக்கிறது. (120-2003) (ஸ்ரீதர், ஸ்ரீ மதுரைக் கல்வெட்டுகள் ப.13)

இவை போன்ற கல்வெட்டுச் சான்றுகளும் தொகுக்கப் பெறுகின்றன. மாதிரி வரைபடமும் தயாரிக்கப் பெற்று வருகிறது. விரைவில் விக்கியின் ஒப்புதலின் பேரில் அது இடம்பெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பறம்பு_மலை&oldid=2119759" இலிருந்து மீள்விக்கப்பட்டது