பேச்சு:பனைக்குடும்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்புரிமை ஐயமுள்ள தரவுகள்[தொகு]

வளரியல்பு[தொகு]

தண்டமைவு[தொகு]

நுனியில் பெரிய இலைகளை மகுடம் போல் பெற்ற, கிளைத்தலற்ற தூண் போன்ற தண்டினை உடைய, தண்டின் மேற்பரப்பில் உதிர்ந்த இலைகளின் தழும்புகளையுடைய, பெரிய மரங்களாகும். (எ.கா.) கோகாஸ் நியூசிஃபெரா அல்லது புதர்செடி (எ.கா.) நிபா புரூட்டிக்கன்சு, இத்தாவரத்தில் தரைமேல் தண்டு காணப்படுவதில்லை. தரைக் ̧கீழ் தண்டான, ரைசோமிலிருந்து நேரடியாக பல இலைகள் உற்பத்தியாகின்றன. வேரானாது, வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பாக அமைந்துள்ளது. இதன் தண்டுப் பகுதியானது, தரையின் மேல் காணப்படும் கிளைத்தலற்ற தூண் போன்ற, குறிப்பிட்ட உதிர்ந்த இலையின், அடையாளங்களையுடைய தண்டினையுடையது. ஃபோனிக்சு அக்காலிசு தாவரத்தின் தண்டு குட்டையாகவும், பருத்தும் காணப்படும். தண்டிலுள்ள கணு இடைவெளி மிகவும் குறுகிக் காணப்படும்.

இலையமைவு[தொகு]

இலையடிசெதிலற்றவை. நீண்ட இலைக்காம்புடையவை. அகன்ற இலையடிப்பகுதியுடையவை. அங்கைவடிவ கூட்டிலை (எ.கா. பொராசசு பிலாபெல்லிஃபெர்). பொதுவாக நுனியில் கூட்டமாக அமைந்தவை. சுழல் இலையமைவு பெரும்பாலும் காணப்படும். எனினும், கலாமஸ் தாவரத்தில் மாற்றிலை அமைவு காணப்படுகிறது. சிறகுவடிவ இணைபோக்கு நரம்பமைவு (எ.கா. கோகாஸ் நியூசிஃபெரா) அல்லது அங்கைவடிவ விரி இணை நரம்பமைவு (எ.கா. பொராசசு பிலாபெல்லிபெர்) காணப்படுகிறது.

இனப்பெருக்க வட்டங்கள்[தொகு]

பூவிதழ் வட்டம்[தொகு]

பூவிதழ்கள் 6, அடுக்கிற்கு மூன்று வீதம் இரு அடுக்கில் அமைந்துள்ளன. இதழ்கள் நிலையானவை. தனித்தவை. தொடுஇதழ் அல்லது திருகு இதழ் அல்லது தழுவு இதழ் போன்ற ஏதேனும் ஒரு இதழ் அமைவில் இணைந்துக் காணப்படுகின்றன. ஃபோனிக்ஸ் அக்காலிசு தாவரத்தில் வெளி அடுக்கிலுள்ள இதழ்கள் தொடு இதழ் அமைவில் இணைந்தும்; உள்அடுக்கிலுள்ள இதழ்கள் திருகு இதழ் அமைவில் தனித்தும் காணப்படுகின்றன.

மகரந்தத்தாள் வட்டம்[தொகு]

மகரந்தத்தாள்கள் 6, அடுக்கிற்கு மூன்று வீதம் இரு அடுக்கில் அமைந்துள்ளன. இதழ்களுக்கு எதிராக அமைந்துள்ளன. மகரந்தப் பைகள் இரு அறையுடையவை. அடி இணைந்த அல்லது முதுகுப்புறம் இணைந்த மகரந்தக்கம்பிகளுயுடையது. உட்புறமாக நீள் வாக்கில் வெடிப்பவை. ஆண் மலர்களில் வழக்கமாக மலட்டுச் சூலகம் காணப்படும்.

சூலக வட்டம்[தொகு]

  • மஞ்சரி:வழக்கமாக இலைக் கோணத்தில் பக்கவாட்டில் உற்பத்தியாகும் பெரிய மஞ்சரிகளாகும். ஃபோனிக்சு சில்வெஸ்ட்ரிசு தாவரத்தில், ஸ்பாடிக்ஸ் மஞ்சரி காணப்படுகிறது. கோகாஸ் நியூசிஃபெராவில், கூட்டு ஸ்பாடிக்ஸ் மஞ்சரி காணப்படுகிறது. கடினமான பெரிய மடல் ஒன்றினால், இம்மஞ்சரி மூடப்பட்டுள்ளது. கொரிஃபா அம்ப்ரகுஃபெரா (குடைபனை) தாவரத்தில் நுனியிலமைந்த ஸ்பாடிக்ஸ் மஞ்சரியானது, சுமார் 10 மீட்டர் நீளமுடையது. இது ஒரு மானோகார்பிக் தாவரம். கோகாஸ் நியூசிஃபெரா பா-கார்ப்பிக் மற்றும் ஓரில்லத் தாவரமாகும். பொராசஸ் பிலாபெல்-ஃபெர் ஒரு பா-கார்ப்பிக் மற்றும் ஈரில்லாத் தாவரமாகும்.
  • மலர்: பூவடிச்செதிலுடையது. பூக்காம்பு செதிலற்றது. பூக்காம்பற்றது. வழக்கமாக ஒருபால் மலர் மற்றும் ஓரில்ல மலர், அல்லது ஈரில்லமலர். மூவங்கமுடையது. முழுமையற்றது. ஆரச்சமச்சீருடையது. மேல் மட்ட சூற்பையுடையது. பொராசஸ் பிலாபெல்-ஃபெர் தாவரத்தில் ஆண்மலர்கள், பெண்மலர்களைவிட சிறியவை ஆகும். கோகாஸ் ̈யூசிஃபெராவில், 'பெம்' மலர்கள் ஸ்பைக்கின் ̧கீழ் பகுதியிலும், 'ஆம்' மலர்கள், 'ஸ்பைக்'கின் கீழ்பகுதியிலும் அமைந்துள்ளன.
  • சூல்: மேல்மட்ட சூற்பையுடையது. மூன்று சூலக இலைகளையுடையது. சூலக இலைகள் இணைந்தவை. மூன்று சூலக அறைகளையுடையது. ஒரு சூலக அறையில், ஒரு சூல் வீதம் அச்சு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளது. ஃபோனிக்சு அக்காலிசு தாவரத்தில், சூல்கள் அடிச்சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூல் தண்டு, மிகச் சிறியது அல்லது காணப்படுவதில்லை. மூன்று சூல்முடிகளையுடையவை. பெண் மலர்களில் மலட்டு மகரந்தத்தாள்கள் காணப்படும். கோகாசு நியூசிஃபெரா தாவரத்தில் மூன்று சூலக இலைகளில், இரண்டு சூலக இலைகள் சிதைந்து விடுகின்றன.
  • கனி:நார்களாலான மீசோகார்பையுடைய ட்ரூப் ஆகும்.
  • விதை:அதிக அளவு கருவுணவையும், மிகச்சிறிய கருவையும் கொண்டது,


குறிப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனைக்குடும்பம்&oldid=3852992" இலிருந்து மீள்விக்கப்பட்டது