பேச்சு:நோர்வேத் தமிழ் நபர்கள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கியில் கட்டுரையற்று இருக்கும் இப்பட்டியலை நீக்கலாம். --AntonTalk 11:21, 25 பெப்ரவரி 2014 (UTC)

இவ்வாறு மேலோட்டமாக நீக்கல் வேண்டுகோள்களை இடுவதைத் தவிர்க்கவும். கட்டுரை இல்லாமல் பல உள்ளடக்கங்கள் விக்கியில் உள்ளன. --Natkeeran (பேச்சு) 17:16, 25 பெப்ரவரி 2014 (UTC)
இங்கு மேலோட்டமாக நீக்கல் வேண்டுகோள்களை இடப்படவில்லை. ஏற்கெனவே பட்டியல் பற்றிய நடந்த பேச்சு அடிப்படையிலேயே நீக்கல் வேண்டுகோள் இட்டேன். விக்கியில் பட்டியல் தொடர்பில் விதிமுறை இருந்தால் குறிப்பிடுங்கள், அதன்படி செயற்படுகிறேன். மேலும், நீக்கல் வேண்டுகோள் இடப்பட்டிருக்க, மேலோட்டமாக அல்லது ஒருதலைப்பட்சமாக அதை நீக்காது உரையாடுங்கள். --AntonTalk 02:56, 26 பெப்ரவரி 2014 (UTC)
நீங்கள் சுட்டிய மேற்கோளில், இம் மாதிரிக் பட்டியல்களை நீக்கு என்று முடிவு எடுக்கப்படவில்லை. ஒரு உரையாடல் பக்கத்தில் நடந்தத்தை பொது வழிகாட்டலாகவோ, அல்லது கொள்கையாகவோ கருத முடியாது. கட்டுரை அற்று இருக்கும் பட்டியல் என்று கொள்கை வகுக்க முடியாது. பட்டியல் உருவாக்குவது என்றால் எல்லா பட்டியல் உள்ளக்கத்துக்கும் கட்டுரை உருவாக்கவா வேண்டும். இப் பட்டியலில் மேற்கோள்கள் முறைப்படி சேர்க்கப்பட வேண்டு என்று கோரி இருந்தால் அது சரியான வேண்டுகோளாக அமைந்து இருக்கும். --Natkeeran (பேச்சு) 15:03, 26 பெப்ரவரி 2014 (UTC)