பேச்சு:நிறமாலை ஒளியளவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


spectroscope = நிறமாலைமானி என்று தான் பாடநூல்களில் கொடுக்கப்பட்டு உள்ளது; ஒளி தேவையில்லை.--பரிதிமதி 02:35, 15 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி பரிதிமதி, உங்கள் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டு திருத்தப்படும் --செந்தில் ராஜேந்திரன் 05:26, 24 ஏப்ரல் 2010 (UTC)
உங்கள் கருத்துக்கு நன்றி பரிதிமதி........ஆனால் இந்த கட்டுரை spectroscope அல்ல Spectrophotometry. அதற்கு நிறமாலை ஒளிமானி என்ற தலைப்புதான் பொருந்தும் என்று கருதுகிறேன். --பாபு 05:00, 18 மே 2010 (UTC)[பதிலளி]
photometer = ஒளிமானி. photometry = ஒளிமானியியல்? --ரவி 06:51, 18 மே 2010 (UTC)[பதிலளி]
ஆம் ரவி. கட்டுரையில் Spectrophotometer என்று வரும் இடங்களில் நிறமாலை ஒளிமானி என்றும் Spectrophotometry என்று வரும் இங்களில் நிறமாலை ஒளிமானியியல் என்றும் பயன்படுத்தி உள்ளேன். ஆனால் கட்டுரையின் தலைப்பில் என்னால் மாற்றம் செய்ய இயலவில்லை அது நிறமாலை ஒளிமானியியல் என்று மாற்றப்பட வேண்டும். எவ்வாறு மாற்றுவது? --பாபு 09:17, 18 மே 2010 (UTC)[பதிலளி]
  • பாபு! நிறமாலை ஒளிமானியைப் பற்றி நீங்கள் எழுதியதை நான் கவனிக்காததற்கு மன்னிக்கவும். நீங்கள் பயன்படுத்திய சொல் சரியே - ஒரு சிறு மாறுதலுடன். Spectrophotometer = நிறமாலை ஒளிமானி. Spectrophotometry = நிறமாலை ஒளியளவியல் (அ) நிறமாலை ஒளிமானம். ( காண்க. விக்சனரியில் photometry [1] நன்றி. --பரிதிமதி 09:30, 18 மே 2010 (UTC)[பதிலளி]

ஒளியளவியல் என்பது நல்ல சொல். சுட்டிக்காட்டியதற்கு நன்றி பரிதமதி. பக்கத்தை நகர்த்தி உள்ளேன். பக்கத்தின் மேல் உள்ள "நகர்த்தவும்" என்ற இணைப்பை அழுத்தினால் தலைப்பை மாற்றலாம்--ரவி 09:36, 18 மே 2010 (UTC)[பதிலளி]

  • தலைப்பில் நீங்கள் கூறிய மாற்றத்திற்கு நன்றி பரிதிமதி. தலைப்பில் மாற்றம் செய்தமைக்கும் எவ்வாறு மாற்றுவது என்பதைத் தெரிவித்தமைக்கும் நன்றி இரவி. கட்டுரையிலும் இந்த மாற்றத்தை நான் செய்துவிடுகிறேன். --பாபு 09:49, 18 மே 2010 (UTC)[பதிலளி]