பேச்சு:நாய் இறைச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

chow chow நாய்க்கும் இந்த கட்டுரைக்கும் என்ன தொடர்பு? இந்த நாய் வகை சிறப்பாக இறைச்சிக்காக வளர்க்கப்படவது அல்லது விரும்பி உண்ணப்படுவது என்றால் அது குறித்து குறிப்பிடலாம். இல்லையேல், படத்தை நீக்கி விடலாம்--ரவி 22:12, 6 ஆகஸ்ட் 2006 (UTC)

இப்படம் இதே தலைப்பில் உள்ள வேறு ஒரு விக்கியில் இருந்து எடுக்கப்பட்டது. நாய் எப்படி இருக்கும் என்று காட்ட இப்படம் உதவுகின்றது. ஏன் நீக்க கோருகின்றீர்கள்? --Natkeeran 22:57, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

நாய்கள் குறித்த கட்டுரையில் வித விதமான நாய்கள் படம் தந்தால் பொருத்தமாக இருக்கும். மற்றபடி, இந்தக் கட்டுரைக்கு நாய் படம் அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை. நாய் எப்படி இருக்கும் என்பதை நாய் கட்டுரையில் காட்டுவது தான் சரி :)--ரவி 23:04, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

சரி ரவி, நாய் என்றால் மனிதனின் நண்பன் என்று படித்துவிட்டு நாய்கறி பற்றி பேச சற்று Taboo தான். --Natkeeran 23:09, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

யப்பான்[தொகு]

இங்கு யப்பானில் நாய் இறைச்சி உண்ணப்படுவதாக்க கூற்ப்பட்டுள்ளது. அதற்கான உசாத்துணையை தரவும். ஏனெனில் யப்பானில் நாய் இறைச்சி உண்ணப்படுவதை நான் இவ்வளவு நாளும் காணவில்லை (சுமார் 1 வருடம்). --டெரன்ஸ் 03:38, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

http://ja.wikipedia.org/wiki/%E7%8A%AC%E9%A3%9F%E6%96%87%E5%8C%96 என்ன சொல்கின்றது டெரன்ஸ்?--Natkeeran 22:57, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

இங்கு யப்பான் என்ற பகுதியின் கீழ் 2 ஆம் உலகமகா யுத்ததுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது நாய் ஏன் மனித இறைச்சி உண்ணப்பட்டதாகவும்.

2004 இல் 26 தொன் நாய் இறைச்சி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது "கொரியாடவுன்" (அகதி,நிரந்தர கொரியர்கள் வசிக்குமிடம்)பகுதியில் உற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இங்கு யப்பானியரை பொருத்தவரை, இப்போது நாய் இறைச்சி உற்கொள்ளவதில்லை.--டெரன்ஸ் 01:21, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி டெரன்ஸ், யப்பானை நீக்கிவிடுவதென்றால் நீக்கிவிடவும். அல்லது யப்பானில் வசிக்கும் கொரியர்களால் என்று அடைப்புக்குறிக்குள் இடலாம். --Natkeeran 01:44, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாய்_இறைச்சி&oldid=54502" இலிருந்து மீள்விக்கப்பட்டது