பேச்சு:நாச்சியார்கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

24 டிசம்பர் 2016[தொகு]

24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரவு நேரமாகிவிட்டதால் தெளிவான புகைப்படம் எடுக்கமுடியவில்லை. பின்னர் தெளிவான படம் எடுக்கப்பட்டு, சேர்க்கப்படும். தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:45, 28 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

26 பிப்ரவரி 2017[தொகு]

26 பிப்ரவரி 2017இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டன. முன்பு இரவு நேரத்தில் என்னால் எடுக்கப்பட்ட, பதிவில் இணைக்கப்பட்டிருந்த தெளிவற்ற படங்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:56, 3 மார்ச் 2017 (UTC)

தலைப்பு[தொகு]

@பா.ஜம்புலிங்கம்: கட்டுரையின் தலைப்பு சரியா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:50, 3 மார்ச் 2017 (UTC)

வணக்கம்,@Kanags: வணக்கம், திருநறையூர் என்னும் நாச்சியார்கோயில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நாச்சியார்கோயில் எனப்படுகின்ற இக்கோயில் மங்களாசாசனம் பெற்ற கோயிலாகும். இங்குள்ள மூலவர் திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வ்யூகவாசுதேவன், சுகந்தவனதான் என்னும் பெயர்களைக் கொண்டுள்ளார். தாயார் வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார் என்றழைக்கப்படுகிறார். (பார்வை : 108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு, ஆ.எதிராஜன், வைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, பக்.107, 108) இக்கோயிலைக் குறிப்பிடும்போது திருநறையூர் என்னும் நாச்சியார்கோயில் என்கின்றனர். நாச்சியார்கோயில் என்பது ஊரின் பெயராகவும் கோயிலின் பெயராகவும் அமைந்துள்ளது. நாச்சியார்கோயில் என்றாலே இக்கோயிலைத்தான் குறிப்பிடுவது மரபாக உள்ளது. (தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன்கோயில் என்பது ஊரின் பெயராகவும், கோயிலின் பெயராகவும் அமைந்துள்ளது. இருந்தாலும் மாரியம்மன்கோயில் அமைந்துள்ள இடம் புன்னைநல்லூர் என்றாலும் புன்னைநல்லூர் என்ற ஊர் பெயரை எவரும் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை). தலைப்பு நாச்சியார்கோயில் என்ற தலைப்பில் இருந்ததாலும், தொடர்ந்து பலர் பதிவிட்டிருந்த நிலையிலும் நான் புகைப்படங்களை மட்டும் பதிவேற்றினேன். புரிந்துகொள்ளும் வகையில் கோயிலைக் குறிப்பாக அடையாளப்படுத்தவும், ஊரின் பெயர் குழப்பம் இல்லாமல் இருக்கவும் திருநறையூர்நம்பி நாச்சியார்கோயில் என்று குறிப்பிடலாமா அல்லது வழக்கில் உள்ளவாறு நாச்சியார்கோயில் என்றே இருக்கலாமா என்பது பற்றி கருதிப்பார்க்க வேண்டுகிறேன். (தினமலர் கோயில்கள் தளத்தில் http://temple.dinamalar.com/New.php?id=375 என்ற இணைப்பில் அருள்மிகு திருநறையூர்நம்பி திருக்கோயில் என்றுள்ளது.) --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:22, 3 மார்ச் 2017 (UTC)
கட்டுரையில் நாச்சியார் + கோயில் எனப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. தலைப்பு நாச்சியார்கோயில் எனச் சேர்ந்துள்ளது. அதையே குறிப்பிட்டேன். பொதுவாகப் பிரித்து எழுதுவதுதானே முறை. ஆனால், சில விதிவிலக்குகளும் உண்டு. அதனாலேயே கேட்டேன். நாச்சியார்கோயில் என்ற ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது என இப்போது அறிந்து கொண்டேன். அதனைக் கட்டுரையிலும் குறிப்பிடுவது நல்லது. இது கோயில் பெயரா அல்லது ஊரின் பெயரா என்பதைப் பிரித்தறிய வேண்டும். ஊரின் பெயரைக் கொண்ட கட்டுரை எழுதும் போது நாச்சியார்கோயில் (ஊர்) என எழுதலாம். நீங்கள் குறிப்பிட்டவாறு திருநறையூர்நம்பி நாச்சியார்கோயில் எனத் தலைப்பிடுவதும் நல்லது. நாச்சியார் கோயில்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கக்கூடும் அல்லவா?--Kanags \உரையாடுக 07:44, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம்,@Kanags:, பொதுவாக நாச்சியார்கோயில் என்று இணைத்தே எழுதுகின்றார்கள். அவ்வாறே வைத்துக்கொள்வோம். இப்பதிவின் தலைப்பினை திருநறையூர்நம்பி நாச்சியார்கோயில் என்று அமைக்கலாம். அதைவிட நாச்சியார்கோயில் (கோயில்) என்று அமைப்பது மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். திருநறையூர்நம்பி என்ற சொல்லுடன் தலைப்பினை மாற்றினால் வெளியூர்ப்பயணிகளும், பக்தர்களும், வெளிநாட்டவர்களும் தெரிந்துகொள்ள சிரமமாகும். மேலும் நாச்சியார்கோயில் புகழ்பெற்ற கோயிலாக உள்ள நிலையில் திருநறையூர்நம்பி என்பது சேரும்போது அவர்களுக்கு புரிந்துகொள்ளும் நிலையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனக்குத் தெரிந்தவரை ஊர் என்ற நிலையில் தமிழ்நாட்டில் நாச்சியார்கோயில் என்று குறிப்பிடப்படும்படியான ஊர் இது மட்டுமே ஆகும். ஊரைப் பற்றி எழுதும்போது நாச்சியார்கோயில் (ஊர்) என தனியாக ஒரு பதிவினை ஆரம்பித்துக்கொள்ளலாம்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:49, 4 மார்ச் 2017 (UTC)