பேச்சு:தொதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொதல் என்பது ஆங்கிலத்தில் Dodol களு தொதல் என்பது ஆங்கிலத்தில் Kalu dodol இதில் Kalu dodol மட்டுமே இலங்கைக்கு சொந்தமானது ஆயினும் தமிழ் மக்கள் களு தொதல் என்பதை தொதல் என அழைக்கின்றனர்.-- mohamed ijazz(பேச்சு) 11:24, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

தமிழ் வழக்கிலுள்ள பெயர்களுக்கு முக்கியத்துவம் வேண்டும். களு என்பது சிங்களச் சொல். உரையாடிவிட்டு தலைப்பை மாற்றவும். --AntonTalk 11:44, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட (களு தொதல் என்பது இலங்கைச் சோனகர் சமையலில் இடம்பெறும் ஒரு இனிப்புவகை உணவு ஆகும்) என்பது சரியான தகவல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட (இது யாழ்ப்பாணத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது) எனும் வரி தவறானது. இது இலங்கையின் தென் மாகாணதில் தோன்றிய ஒரு இனிப்புவகை. இது மலாயர் வழியாக இலங்கை வந்த பண்டமாகும்.-- mohamed ijazz(பேச்சு) 12:09, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

களு தொதல் ஆங்கிலத்திலும் en:Kalu dodol என்றே அழைக்கப்படுகிறது இக்கட்டுரைக்கு களு தொதல் /கருப்பு தொதல் என தலைப்பிடுவதே சரி தொதல் en:Dodol என ஆங்கில விக்கியில் ஒரு கட்டுரை உள்ளது பார்க்கவும் -- mohamed ijazz(பேச்சு) 12:30, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

தொதல் என்பது உலகளாவிய பொதுவான பெயராக இருப்பதால், தொதல், களுதொதல் என இரு கட்டுரைகளை எழுதலாம்.--Kanags \உரையாடுக 19:50, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை தொதல் என்பதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது, கருப்பு தொதல் பற்றியதல்ல. எனவே இது பற்றி முடிவெடுக்கு முன் தலைப்பை மாற்றுவது சரியான செயலல்ல. --AntonTalk 17:56, 20 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

தொதல் என்றல்ல, தொதொல் என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம். இந்தோனேசியாவில் ஏராளமான தொதொல் வகைகள் கிடைக்கின்றன. காருத் (Garut) என்ற ஊரில் உற்பத்தி செய்யப்படும் தொதொல் வகைகள் சொக்கலேட்டு வகைகளைப் போன்றிருக்கும். பல்வேறு ஊர்களிலும் பல்வேறு விதங்களில் இருக்கும். துரியான், முள் அனோனா, பலா, அப்பிள் போன்றவற்றின் பழங்கள் பயன்படுத்தப்படுவதும் உண்டு. இந்தோனேசியாவில் உள்ள எள் தொதொல் வகைகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுபவற்றை விட வித்தியாசமான சுவையுடன் காணப்படும். இன்றைய இந்தோனேசியாவிலிருந்து பல்வேறு மலாய இனத்தினர்களின் குடியேற்றம் இலங்கையில் ஏற்பட்ட போது அவர்கள் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவையே பத்திக்கு (ஒரு துணி வரைகலை), தொதொல் (ஒரு வகை இனிப்புப் பண்டம். இந்தோனேசியாவில் டொடொல் என்பர்.), வாயாங் (ஒரு வகைப் பொம்மை நாடகக் கலை) போன்றவை. அவ்வாறே மங்குஸ்தான், இறம்புட்டான், துரியான், டொங், ஈரப்பலா, பத்தாவி பாக்கு (பத்தாவியா என்பது ஜகார்த்தாவின் பழைய பெயர். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய பாக்கு இனம் இது.), அம்பொன் வாழை (அம்பொன் என்னுமிடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.) போன்ற மரங்களும் இந்தோனேசியத் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவையே. அவ்வாறே இலங்கை முஸ்லிம்களிடம் வழக்கிலிருக்கும் காவின் (திருமணம்) போன்ற சொற்களும் மலாயச் சொற்களே. இந்தோனேசியாவில் இன்றும் அலுவல் முறை ஆவணங்களிலும் பொது வழக்கிலும் காவின் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர தமையனையோ தமக்கையையோ குறிக்கும் காக்கா அல்லது காஃ என்னும் சொல் கிழக்கிலங்கையில் தமையனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சிறுவர்களை அல்லது தம்பி, தங்கை போன்றோரை அடிஃ அல்லது டே என்று அழைக்கின்றனர். இத்தகைய சொற்களுக்கும் தமிழர்களுக்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. தமிழர்களுக்கும் இந்தோனேசியத் தீவுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த உறவை இன்றைய தமிழர்கள் நினைத்துப் பார்ப்பது அரிது.--பாஹிம் (பேச்சு) 02:23, 21 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொதல்&oldid=1743291" இலிருந்து மீள்விக்கப்பட்டது