பேச்சு:தானுந்துத் தொழிற்றுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இக்கட்டுரை விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டுள்ளது --மோகன் திருநீலகண்டன் 14:54, 20 மே 2010 (UTC)[பதிலளி]


தலைப்பை ஊர்தித் தொழில்துறை என மாற்ற உள்ளேன். மறுப்பு ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

  • ரீதி என்னும் பொருள் விளங்காத சொல்லைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொழில் நோக்கில், வணிக நோக்கில் என்று புரியும்படியாக ஏதேனும் சொல் இட்டு எழுத வேண்டுகிறேன். நோக்கில், கணிப்பில், கண்ணோட்டத்தில், முறையில், வழக்கில் என்று ஏதேனும் பொருத்தமானவொரு சொல்லைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக இந்தக் கட்டுரையில், 2008 ஆம் ஆண்டில், கார்கள் மற்றும் வணிகரீதியான வாகனங்கள் உள்ளிட்ட 70 மில்லியனுக்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் உலகம் முழுவதிலும் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் வணிகரீதியான வாகனம் என்றால் என்ன என்று புரியவில்லை. ஏதோ வணிக சம்பந்தமான என்று புரிந்தது. ஆனால் ஆங்கில விக்கியைப் பார்த்தபின்தான் commerical vehicle என்பதை அப்படி எழுதியுள்ளார் என்று புரிந்தது. வாடகைக்கோ மற்ற வணிக நோக்கில், வணிக ஏற்பாட்டில் பொருள்களை ஏற்றிச்செல்லும் வண்டிகள், ஊர்திகள் என்று புரிந்துகொண்டேன். எனவே வணிகப் பயன்பாட்டு ஊர்திகள். வெறும் வணிக ஊர்திகள் என்றாலே போதுமானது. ஏறத்தாழ எல்லா இடங்களிலும் "ரீதி" என்னும் பொருள் விளங்காத சொல்லை நீக்கிவிட்டு மேற்சொன்ன ஏதேனும் ஒரு சொல்லை இட்டுப் புரியும்படியாக எழுத வேண்டுகிறேன்.--செல்வா 17:43, 19 மே 2010 (UTC)[பதிலளி]


தங்கள் கருத்துக்கு நன்றி, வாகனத் தொழில்துறை என்ற தலைப்பே பள்ளிப் பாடப்புத்தகங்களில் பொதுவாக பயன்பட்டு வருகிறது. ஊர்தி மற்றும் வாகனம் இரண்டுமே அருமையான தமிழ் வார்த்தைகளாகும், ஆகவே தலைப்பில் மாற்றம் செய்ய நான் விரும்பவில்லை. மேலும் "ரீதி" என்ற வார்த்தை இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதற்குப் பல உதாரணங்களைத் தெரிவிக்கலாம். நிறைய புத்தகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் (மக்கள் தொலைக்காட்சி நல்ல தமிழைப் பயன்படுத்தி வருகிறது) பொருளாதார ரீதியில், வணிக ரீதியில் போன்ற பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே ரீதி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறில்லை --மோகன் திருநீலகண்டன் 04:58, 21 மே 2010 (UTC)[பதிலளி]


ஊர்தி என்னும் சொல் உயிரெழுத்தில் தொடங்குவதால், பிற சொற்களுடன் இசைவுடன் இணங்கு. வானூர்தி என்பதை வான வாகனம் என்று சொன்னால் நன்றாக இராது. மேலும், வாகனம் தமிழ்ச்சொல் அல்ல vehicle என்பதோடும் சமசுக்கிருதத்தோடும் தொடர்பு கொண்டு வாஹனம் என்பதன் திரிபு. இதற்காக மட்டும் இத்னை வேண்டாம் என்று சொல்லவில்லை. நூற்றுக்கணக்கான பயன் படும் சொல்லை தமிழ்ச்சொல்லை விலக்கிவிட்டு கடன் சொல்லை இட்டால், (மொழி) உட்பொருள் உறவாட்டங்கள் அருகும். தமிழர்கள் தமிழை எடுத்தாளாவிட்டால் பின் யார் வந்து எடுத்தாள்வார்கள்?!ஊர்தி என்னும் சொல் வாகனம் என்பதைவிட சுருக்கமானது. மேலும் சிலர் வாகனம் என்பது வாஹனம் என்றுதான் இருக்க வேண்டும் என்று கருத்துக்கூறவும் வழிவகுக்கும். தமிழ்ந்நாட்டுப் பாடநூல்களில் முக்கோணவியல் என்ற எளிய சொல்லைக்கூட பயன்ப்டுத்த்ஹாமல் திரிகோணமிதி என்று எழுதியிருக்கின்றார்கள். நீங்கள் விரும்பினால் முதலில் ஊர்தித் தொழிற்சாலை என்பது வாகனத் தொழிற்சாலை என சில இடங்களில் வழங்குகின்றது என்னும் அடிக்குறிப்பை இடலாம். ஊர்தித் தொழிற்சாலை என்னும் தலைப்பு பல கோணங்களில் சிறந்ததாக எனக்கு படுகின்றது. வானூர்தி, நீரூர்தி போன்ற சொற்களிலும் இயல்பாய் இணைகின்றது.--செல்வா 17:13, 20 மே 2010 (UTC)[பதிலளி]
ரீதி என்னும் சொல்லின் பயன்பாடுபற்றி அறிவேன், ஆனால் அது பொருள் துல்லியம் சுட்டாத சொல். களைந்து எழுதுவது நல்லது என்பது என் கருத்து. --செல்வா 17:17, 20 மே 2010 (UTC)[பதிலளி]
மொழியில் வழங்கும் சொற்கள், சொற்கூறுகள் ஒன்றுக்கு ஒன்று வலுசேர்த்தும், பொருள்மணம் கூட்டியும் துணை நிற்கும். இதனால் கருத்து வளர்ச்சி நன்றாக நடைபெறும். Linguistic ecology என்று இதனைச் சொல்லலாம் (மொழி உட்ச்சூழிணக்கவியல்). ஊர்தி என்னும் நல்ல எளிய சொல் இருக்கும் பொழுது ஏன் தமிழல்லாச் சொல்லை முன்னிறுத்த வேண்டும்? --செல்வா 17:44, 20 மே 2010 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

கட்டுரைத் தலைப்பை தானுந்துத் தொழில்துறை என மாற்றலாமா?--சிவக்குமார் \பேச்சு 09:28, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

தொழில்துறை என்பது பிழை. தொழிற்றுறை என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 15:29, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]