பேச்சு:தளபதிசமுத்திரம் ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தளபதிசமுத்திரம் ஊராட்சி என்று மாற்ற அல்லது இதுபோல் பெயர் மாற்ற வேண்டியுள்ள ஊராட்சிகள் பட்டியல் இருப்பின் (தானியங்கி மாற்றம்?) அதனுடன் இணைக்க வேண்டுகின்றேன். - ʋɐɾɯɳபேச்சு 18:51, 13 மே 2016 (UTC)[பதிலளி]

இது போன்ற மாற்றங்களை தனித்தனியாகவே செய்வதே நல்லது. தானியங்கியாகக் கட்டுரைகள் உருவாக்கிய பின்னர், தானியங்கியின் செயற்பாடுகள் முடிவடைய வேண்டும். உருவாக்கிய பின்னர் அவற்றைத் திருத்துவதோ அல்லது அவற்றை மேம்படுத்துவதோ தனித்தனிப் பயனர்களின் பணியாக இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான தானியங்கிக் கட்டுரைகளில் இவ்வாறு மாறிச் சரங்கள்' இணைத்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதனால் இம்மாதிரியான விக்கிக் கட்டுரைகளைத் தொகுப்பது குழப்பமாக உள்ளது. இம்மாறிச் சரங்களை நீக்க வேண்டும். @Neechalkaran and Ravidreams:.--Kanags \உரையாடுக 23:36, 13 மே 2016 (UTC)[பதிலளி]
Kanags, மாறிச்சரங்கள் தொகுக்கும் போது குழப்புவது உண்மை தான். ஆனால், ஆயிரக்கணக்கான கட்டுரைகளின் தரவுகள் தேங்கிப்போகாமல் வருங்காலத்தில் தொடர்ந்து தானியக்கமாக இற்றைப்படுத்த இயல வேண்டும் என்ற நோக்கிலேயே மாறிச்சரங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதே போக்கு தானியக்கம் இல்லாத கட்டுரைகளிலும் விக்கித்தரவு பயன்பாடு ஊடாக வருங்காலத்தில் கட்டாயமாகக் கூடும். தற்போது, குழப்பத்தைத் தவிர்க்க Visual editor பயன்படுத்தித் தொகுப்பதை ஊக்குவிக்கலாம். --இரவி (பேச்சு) 07:41, 14 மே 2016 (UTC)[பதிலளி]
@Kanags and Ravidreams: மாறிச்சரங்கள் - Variable Strings? - ʋɐɾɯɳபேச்சு 08:18, 14 மே 2016 (UTC)[பதிலளி]
@Wwarunn: ஆம். --இரவி (பேச்சு) 06:01, 24 மே 2016 (UTC)[பதிலளி]