பேச்சு:தமிழ் விவிலியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விவிலியம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

--George46 18:55, 7 ஏப்ரல் 2010 (UTC)பவுல் லியோன் வறுவேல், நீங்கள் செய்யும் திருத்தங்களும், விரிவாக்கங்களும் மிக அருமை. மிக்க நன்றி :) --செல்வா 17:00, 7 ஏப்ரல் 2010 (UTC)


தங்கள் பாராட்டுக்கு நன்றி! தமிழ் உலகிற்கு நீங்கள் ஆற்றும் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.--George46 18:55, 7 ஏப்ரல் 2010 (UTC)

சிறந்த கட்டுரை. ஒரு கருத்து: கட்டுரைத் தலைப்பு தமிழ் விவிலியம். அதற்கேற்பக் கட்டுரையின் ஆரம்பப் பந்தி மாற்றி எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:51, 4 ஏப்ரல் 2011 (UTC)

  • Kanags, தங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஆயினும் இக்கட்டுரை பற்றி ஒரு சிறு விளக்கம் தருவது பொருத்தம் என்று எண்ணுகிறேன். நான் கொடுத்த தலைப்பு "தமிழ் விவிலியம்" என்று சுருக்கமாக இருந்தாலும், அதன் நீட்டம் "விவிலியம் தமிழில் பெயர்க்கப்பட்ட வரலாறு" அல்லது குறைந்தது "தமிழ் மொழியில் விவிலியம்" என்றாகும். கட்டுரையில் இரு மையக் கருத்துகள் உண்டு: 1) விவிலியத்தைப் பற்றிய மிகச் சுருக்கமான ஓர் அறிமுகம்; 2) தமிழில் அந்த விவிலியம் எக்காலத்தில், யாரால் பெயர்க்கப்பட்டது, எத்தனை மொழிபெயர்ப்புகள், ஏன் மொழிபெயர்ப்புகளிடையே வேறுபாடுகள், எந்த கிறித்தவ சபைகள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டன, இந்திய மற்றும் இலங்கைத் தமிழறிஞர்கள் அம்மொழிபெயர்ப்புகளுக்கு எவ்வாறு தம் புலமை அடிப்படையில் துணைநின்றார்கள், அம்மொழிபெயர்ப்புகளின் இலக்கியத் தரம் என்ன - இவை போன்ற கேள்விகளுக்குக் கட்டுரை சுருக்கமான தகவல்கள் தருகிறது. தமிழ் விக்கியின் கொள்கைக்கு ஏற்ப நடுநிலைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஆக, கட்டுரையின் முதல் பத்தியை மாற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து. அவ்வாறு மாற்றியே ஆகவேண்டும் என்றால், அதற்கான காரணங்களைத் தாங்கள் காட்டுவதாக இருந்தால் எப்படி மாற்றுவது என்றும் கருத்துக் கூறுங்கள். அப்படியே செய்துவிடலாம்.

இன்னொரு கருத்து: இக்கட்டுரைக்கு சில மாற்றுவழிகளும் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்: "தமிழ் மொழியில் விவிலியம்"; "விவிலியத் தமிழாக்கம்"; "விவிலியம் (தமிழ் மொழிபெயர்ப்புகள்)". இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கு நன்றிகூறி அமைகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.--பவுல்-Paul 13:14, 4 ஏப்ரல் 2011 (UTC)

  • Kanags, நீங்கள் கூறியதுபோல, கட்டுரையின் முதல் பத்தியை மாற்றியமைத்துள்ளேன். இவ்வாறு "தமிழ் விவிலியம்" என்னும் சொல்லோடு கட்டுரை தொடங்குகிறது. மீள்வழிகள் இரண்டும் கூட கொடுத்துள்ளேன். கருத்துகள் இருப்பின் தெரிவிக்கவும்.--பவுல்-Paul 15:03, 4 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி பவுல். விக்கிக் கட்டுரைகளில் தலைப்புக் குறித்து ஆரம்பப் பத்தியிலேயே குறிப்புத் தரப்பட வேண்டும். அதற்காகவே மாற்றும்படி வேண்டினேன். நீங்கள் செய்த மாற்றம் நன்றாகவே உள்ளது. மற்றும் மாற்றுவழிகள் பல உருவாக்குவதில் தவறில்லை மட்டுமல்ல அவசியமானதும் கூட.--Kanags \உரையாடுக 21:17, 4 ஏப்ரல் 2011 (UTC)
  • வழிகாட்டலுக்கு நன்றி, Kanags.--பவுல்-Paul 22:53, 4 ஏப்ரல் 2011 (UTC)

கருத்து[தொகு]

  • நன்றி பவுல், மிகவும் பயனுடைய கலைக்களஞ்சியக் கட்டுரை. விவிலியத்தைப் பற்றி அறிய நல்ல கட்டுரை. சில இடங்களில் நூல் சான்று இணைத்தால் இன்னும் அருமையாககைருக்கும். இச்சான்றுகள் உங்களுக்கு எளிதில் கிட்டுவதாகவே இருக்கும் என்று நம்புகிறேன், மேலும் நீங்கள் தருவது மிகவும் உகந்ததாக இருக்கும், தக்க ஒன்றாகவும் தருவீர்கள்! சான்று சுட்டினால் இன்னும் சிறக்கும். வேண்டப்படும் இடம்: "பல கிறித்தவ சபையினர் இணைந்து உருவாக்கி 1995 இல் வெளியான தமிழ் பொது மொழிபெயர்ப்பின் தலைப்பு திருவிவிலியம் என அமைந்துள்ளது." --செல்வா 02:37, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  • செல்வா, சான்று இணைத்துள்ளேன். ஏற்கெனவே இரண்டாவது அடிக்குறிப்பாக அது இருந்தது. ஆனால், நீங்கள் கேட்டபடி முதலிலேயே வருவதே முறை. மேலும், அடிக்குறிப்புகளும் ஆதாரங்களும் முழுக் கட்டுரைக்குமே சான்றுகளாக அமைவதால் அவற்றைப் பன்முறை குறிப்பிடவேண்டாம் என்றே விடுத்தேன். "திருவிவிலியம்" நூலின் முகப்புப் பக்கத்தை விக்கி காமன்சில் பதிவேற்றி, இக்கட்டுரைக்குப் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.--பவுல்-Paul 03:01, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஜான் பிலிப்பு பப்ரீசியஸ் x யொஃகான் ஃபிலிப்பு ஃபெப்ரீசியசு[தொகு]

தமிழ் விவிலியம்#சீர்திருத்த சபையினர் வெளியிட்ட மொழிபெயர்ப்புகள் என்னும் பகுதியில் உள்தலைப்பாக, "ஈ) ஜான் பிலிப்பு பப்ரீசியஸ் மொழிபெயர்ப்பு" என்று உள்ளது. இதே பகுதியில் உள்ளே "யொஃகான் ஃபிலிப்பு ஃபெப்ரீசியசு" என்றும் வருகின்றது. யொஃகான் ஃபிலிப்பு ஃபெப்ரீசியசு என்று மாற்றலாமா? --செல்வா 14:22, 22 பெப்ரவரி 2012 (UTC)

  • அப்படியே மாற்றிவிடுங்கள். உரையைத் தரப்படுத்தல் மிக்க நன்று!--பவுல்-Paul 17:13, 22 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி, மாற்றிவிட்டேன். --செல்வா 17:48, 22 பெப்ரவரி 2012 (UTC)

இரண்டாவது உ தி[தொகு]

கட்டுரையை இரண்டு மூன்று முறை முழுவதுமாகப் படித்துப் பார்த்தேன். மிகவும் அருமையாகவும் விரிவாகவும், பல செய்திகளைத் தொகுத்தும் எழுதப்பட்டுள்ளது. குறுந்தகடு இரண்டாவது உ.தி முடிந்துவிட்டது என்று பதிவிட இருக்கின்றேன் (மீதம் இருப்பவை சில ஐயங்களும், சிறிதளவும் சீர்மைகளுமே; அவற்றை இப்பொழுது உள்ளவாறே இருக்கலாம் என்று எண்ணுகிறேன். எ.கா பேஸா சுவடி (Codex Bezae) என்பதை பெசே, பெஸே (அல்லது பெசீ, பெஸீ) என்று இருக்க வேண்டுமோ என்று ஐயம். சினாய்ச் சுவடி என்று ச் வர வேண்டும் என்று நினைக்கின்றேன்.. இப்படி சில. இன்னும் ஒரு முறை படித்துவிட்டு இரண்டாவது உ.தி முடிந்ததாகப் பதிவிடுகிறேன்.--செல்வா 17:48, 22 பெப்ரவரி 2012 (UTC)

  • செல்வா, "பேசா" என்று இடலாம் என நினைக்கிறேன். அச்சுவடி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் Beza. அதன் genitive case "Bezae". துல்லியமாக உரைதிருத்துகிறீர்கள். பாராட்டு!--பவுல்-Paul 17:54, 22 பெப்ரவரி 2012 (UTC)
  • மேலே குறிப்பிட்டது தவறு. சுவடியைக் கண்டுபிடித்த அறிஞர் பெயர் தியடோர் பேசா. --பவுல்-Paul 17:58, 22 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_விவிலியம்&oldid=1033740" இலிருந்து மீள்விக்கப்பட்டது