பேச்சு:தமிழகப் பழங்குடிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • சென்சஸ் - மக்கள் தொகை கணிப்பீடு, மக்கள் புள்ளிவிபர கணிப்பீடு, புள்ளிவிபரங்கள்

APA Referncing!

  • அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். மனோரமா இயர்புக் 2005, 302-318.

--Natkeeran 04:19, 30 ஜூன் 2006 (UTC)

நற்கீரன், கணக்கெடுப்பு என்னும் சொல்லை ஆண்டிருக்கிறேன். மேற்க்கோள் முறைய மாற்றியுள்ளேன்.--C.R.Selvakumar 10:10, 30 ஜூன் 2006 (UTC)செல்வா

தொல்குடிகள், முதற்குடிகள், ஆதிக்குடிகள் போன்ற சொற்கள் பழங்குடிகள் என்பதை விட நன்றாக படுகின்றதா. பழமை என்ற சொல் சற்று நெருடலை தருகின்றது. --Natkeeran 01:08, 5 ஜூலை 2006 (UTC)

பழங்குடிகள் என்னும் சொல்லாட்சி தமிழ்நாடு அரசின் ஆவணங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் ஆளப்பட்டுள்ளது. மனோரமா போன்ற பரவலாக விற்பனையாகும் yearbook களிலும், பற்பல இதழ்களிலும் ஆளப்படும் சொல். ஆதிவாசிகள், பழங்குடிகள் ஆகிய இரண்டு சொற்களும் பரவலாக ஆளப்படும் சொற்கள். பேராசிரியர் அ.கா.பெருமாள் (நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், நாகர்கோவில், தமிழ்நாடு) அவர்கள் எழுதிய கட்டுரையின் தலைப்பே தமிழகப் பழங்குடிகள். வட அமெரிக்க பழங்குடிகளை முதற்குடிகள் என்று குறிக்கலாம் (ஆங்கில வழக்கைப் பின்பற்றி (First Nations) ). பழமை என்ற சொல் ஏன் நெருடலைத் தருகின்றது என விளங்க வில்லை. இவர்கள் பன்னெடுங்காலமாக அதிக மாற்றமில்லா வாழ்க்கையைக் கொண்டுள்ளனர். தொல்குடிகள் என்றாலும் பழங்குடிகள் என்றாலும் ஒன்றே. தொன்மை=பழமை. தொன்மை எனில் கால முதன்மை என்னும் பொருளும் தருவது போலவே பழமை என்னும் சொல்லும் கால முதன்மை தரும், ஆனால் சற்று வேறுபட்டது. தொன்மை முதன்மை மட்டுமே குறிக்கும், பழமை ஒருவகையான செழுமையையும், பண்பாட்டுத்தன்மையையும் குறிக்கும். --C.R.Selvakumar 13:21, 5 ஜூலை 2006 (UTC)செல்வா
பொது பயன்பாட்டை கருதி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பழசு, பழமை என்பது தற்காலத்தின், நவீனத்தின் எதிர்மறையாக தெரிகின்றது. எதோ தேவையற்றது போன்று தொனிக்கின்றது. மேலும், காலம் காலமாக ஒரே மாரித்தான் வாழ்ந்தார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. இது அவர்களை வரலாறு அற்றவர்களாக அல்லது தேவையற்றவர்களாக கருதி, அவர்களின் தற்கால தேவைகளை மாற்றங்களை புறக்கணிக்கும் ஒரு கண்ணோட்டத்தை வலியுறுத்தும் ஒரு பார்வையை தரலாம். --Natkeeran 13:32, 5 ஜூலை 2006 (UTC)
பல இடங்களில் பழமை என்பது பெருமை. நட்பில் பழமை என்பது பெருமை. பழந்தமிழ் என்பதில் தொன்மையும், பெருமையும் தொனிக்கும். பழகு, பழக்கம், பழம் (காய் பழம் ஆவது) என்பனவற்றில், நுட்பமாய் சிறப்புறுவது, வளர்ச்சி அடைவது என்பதே பொருள். பழுத்த அறிஞர், பழுத்த பண்பாளர் என்னும் வழக்குகளில், பழமை பெருமியே சேர்க்கும். பழசு, பழையது என்பது பயனற்று விட்டது, தேய்ந்து விட்டது என்னும் பொருளில் ஆண்டாலும், பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னும் தொகாப்பிய வழக்கு போன்றவற்றாலும் தள்ளத்தக்கது என்னும் பொருள் வரும்தான். ஆனால் இங்கே பழங்குடிகள் என்பது அவர்கள் நெடுங்காலமாக உள்ள குடிகள் என்னும் ஒரே பொருள் தான் தரும். --C.R.Selvakumar 13:46, 5 ஜூலை 2006 (UTC)செல்வா
செல்வாவுடன் உடன்படுகிறேன்--ரவி 09:26, 6 ஜூலை 2006 (UTC)

குறும்பர்? குரும்பர்[தொகு]

குரும்பர் பல்லவ இனவழியென்றும்; பல்லவரின் வீழ்ச்சிக்கு சோழர் காரணமாகின்றனர் என்றும்; அப்போது சிதறுண்டவர், இவரே என்றும் கருத்துக்கள் உண்டு. குரும்பு என்ற ஆட்டினங்களை மலைகளில் மேய்த்துப் பிழைப்பதால், குரும்பர் எனப் பெயர் வந்ததாக இவர்களின் உரிமைக்காகப் போராடுபவர் கூறுகின்றனர். அதற்கான அமைப்பு தமிழக்கத்தில் நான் வசிக்குமிடத்திலிருந்து, 100கி.மீட்டருக்குள் தான் இருக்கிறது. அவர்களை நேரில் சந்தித்த பிறகு, குரும்பர் பற்றி விரிவாக எழுதலாமென்று உள்ளேன்.த* உழவன் 06:07, 4 நவம்பர் 2009 (UTC)தொடர்புக்கு..[பதிலளி]