பேச்சு:டி. எம். சௌந்தரராஜன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. எம். சௌந்தரராஜன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வார்ப்புரு[தொகு]

@Dineshkumar Ponnusamy:, இசைக்குழு வார்ப்புருவில் Background color எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை வார்ப்புரு:Infobox musical artist/color இல் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:49, 25 செப்டம்பர் 2015 (UTC)

வார்ப்புருவை தமிழில் மாற்றிவிட்டேன். தவறுதலாக செய்யப்பட்டதென்று என்று எண்ணியே மீள்வித்திருந்தேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:12, 25 செப்டம்பர் 2015 (UTC)
தமிழுக்கு மாற்றத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவ்வாறு மாற்றினால், அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் (சுமார் 300) மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். document இலும் மாற்றம் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 09:21, 25 செப்டம்பர் 2015 (UTC)
அத்துடன், நீங்கள் solo_singer என்பதற்கு பாடகர் என எழுதியிருக்கிறீர்கள். இன்னும் ஒருவர் கட்டுரையில் தனிப் பாடகர் எனவும் எழுதலாம். அப்போது சரியான (universal) நிறம் பதிவாகாது.--Kanags \உரையாடுக 09:24, 25 செப்டம்பர் 2015 (UTC)
மேலும் ஒன்றை மட்டும் மொழிபெயர்த்து விட்டு ஏனையவற்றை அப்படியே விட்டு விட்டீர்கள். முழுவதும் ஆங்கிலத்திலேயே இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 09:27, 25 செப்டம்பர் 2015 (UTC)
அனைத்துக் கட்டுரைகளிலும் ஏதேனும் ஒரு தானியங்கி கொண்டு சரி செய்து விடலாம். வார்ப்புருவின் நோக்கம் நிறத்தை மாறுபடுத்திக்காட்டுவது மட்டுமே. ஆகவே அதை எளிதாக செய்துவிடலாம். வார்ப்புருவின் ஆவனத்தையும் மாற்ற வேண்டும். அனைத்து சொற்களுக்கும் சரியான தமிழ்ச்சொல் தெரியாததால் மாற்றவில்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:23, 25 செப்டம்பர் 2015 (UTC)
இவ்வாறான சொற்கள் ஏராளமான வார்ப்புருக்களில் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி வருகிறோம். இங்கு மட்டும் எதற்கு மாற்ற வேண்டும்? மேலும், ஏனைய சொற்களை எவ்வாறு எப்போது தமிழாக்கப் போகிறீர்கள்? இதற்கு நேரம் செலவழிப்பதை விடுத்து வேறு கட்டுரைகளில் நேரத்தைச் செலவிடலாம். கட்டுரைகளில் குறிப்பிட்ட சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனிப் பாடகர் என்று எழுதினாலோ அல்லது தனி பாடகர் என எழுதினாலோ வழு வரும். சரி இதற்கு மேல் நான் வாதிட விரும்பவில்லை. கட்டுரைகளில் வழு ஏற்படாமல் இருந்தால் போதும்.--Kanags \உரையாடுக 11:29, 25 செப்டம்பர் 2015 (UTC)
இங்குமட்டுமல்ல தேவைப்படும் அனைத்து இடங்களிலும் தமிழாக்கம் விரைந்து செயல்படுத்த வேண்டும், தானியங்கி அனுக்கம் கொண்டவரிடத்தில் கோரிக்கை வைக்கிறேன். தனிப்பாடகர் அல்லது தனி பாடகர் என்ற நேரிடை மொழியாக்கம் தேவையில்லை, பாடகர் என்ற இடத்தகு மாற்றம் செய்தாலே போதும். கட்டுரைகளில் வழு ஏற்படாமல் இருப்பது என் விருப்பமும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:30, 26 செப்டம்பர் 2015 (UTC)
அப்போ வார்ப்புருக்கள் முழுவதையும் தமிழாக்கம் செய்து விடுவோமா? உ+ம்: Name...--Kanags \உரையாடுக 10:39, 26 செப்டம்பர் 2015 (UTC)
நிச்சயமாக :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:30, 29 செப்டம்பர் 2015 (UTC)
தமிழ் விக்கியென்றால் தமிழில் தானே இருக்க வேண்டும். உருசிய விக்கியில் உருசிய மொழியில் தான் வார்ப்புருக்களை உருவாக்கியிருக்கிறார்கள். நாமும் அவ்வாறே அனைத்தையும் மாற்றுவோம். ஏற்கனவே ஆயிரக்கணக்கில் ஆங்கில வார்ப்புருக்க்கள் உள்ளன. இவற்றையெல்லாம் தமிழில் மாற்ற வேண்டும். இந்திய விக்கிமீடியா அமைப்பில் நிதி உதவி கேட்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:52, 29 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:47, 29 செப்டம்பர் 2015 (UTC)

பத்மசிறீ விருது[தொகு]

@Info-farmer:, சௌந்தரராஜனை பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள் என்ற பகுப்புக்குள் சேர்க்க வேண்டும். பொதுப் பகுப்பில் இருந்து நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 04:02, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அவர் தமிழகத்தில் பிறந்த, ஆனால், வட மாநில தாயகத்தார். அதனால் தமிழர் என்ற பட்டியலில் சேர்க்கலாமா?--உழவன் (உரை) 04:05, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இப்படிப் பார்த்தால், தமிழகத்தில் எத்தனை வீதம் தமிழர்கள் (கருணாநிதி உட்பட) உள்ளார்கள்?--Kanags \உரையாடுக 04:11, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
சேர்க்கலாம், எனில், இணைத்து விடுங்கள். கட்டுரையாளர் ஏன் இணைக்கவில்லை என்றே எண்ணினேன். தானியக்கம் என்பது இருப்பதையே மாற்றுகிறது. படித்துப் பார்த்து செய்யும் அளவிற்கு இன்னும் மேம்படுத்தவில்லை. நான் வின்டோசை பயன்படுத்துவதில்லை. ஆனால், விக்கிதானுலாவி பயன்படுத்துவதுண்டு. ஏனெனில் அதனைப்போன்ற ஒன்றை கட்டற்ற மென்பொருளுக்கு உருவாக்க முனைந்து வருகிறோம்.--உழவன் (உரை) 04:52, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
வார்ப்புருவில் தானியக்கமாக இணைப்பது ஏற்புடையதாக இராது. இப்போதுள்ள வார்ப்புரு தமிழர், தமிழரல்லாதோரைப் பிரித்துப் பார்க்கவில்லை.--Kanags \உரையாடுக 04:58, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]