பேச்சு:சோழ மண்டலக் கடற்கரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழ மண்டலக் கடற்கரை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பரிந்துரை[தொகு]

கட்டுரைத்தலைப்பை கோரமண்டலக்கரை என மாற்றப்பரிந்துரைக்கிறேன். (மண்டல் -> மண்டலம்) பலுக்க எளிதாக இருக்கும் அல்லவா? --சிவகுமார் \பேச்சு 04:32, 10 ஜனவரி 2008 (UTC)

சோழ மண்டல கரை என்பதே சரி என கருதுகிறேன் arulghsrArulghsr (பேச்சு) 13:03, 7 செப்டம்பர் 2015 (UTC)

அது ஒரு ஆய்வுக்கருத்து மட்டும்தான். அதற்கு பெயரை மாற்ற முடியாது. அந்த ஆய்வுக்கருத்து தகுந்த மேற்கோள்களுடன் கட்டுரையில் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:50, 7 செப்டம்பர் 2015 (UTC)

@தென்காசி சுப்பிரமணியன்: கட்டுரையில் இக்கடற்கரையின் பெயரானது பெரும்பாலும் "சோழமண்டலக் கடற்கரை" எனக் கையாளப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதி "கோரமண்டல் கரை", "சோழமண்டல கடற்கரை" என்ற இரு பெயர்களாலும் வழங்கப்படுகிறதற்கான வெளிப்படையான கூற்று "பெயர்க்காரணம்" என்ற துணைத் தலைப்பில் தெளிவாக இல்லை.

\\இச்சொல் வழக்கு சோழர்களின் பகுதி என்னும் பொருள்தரும் தமிழ்ச் சொல்லான சோழ மண்டலம் என்பதில் இருந்து போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்\\ இதில் இச்சொல் என்பது எதனைச் சுட்டுகிறது என்பதை தெளிவாகக் காட்ட வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் கட்டுரைக்குள் இரு வேறுபெயர்களையும் மாறிமாறி பயன்படுத்தும்போது குழப்பம் இருக்காது.--Booradleyp1 (பேச்சு) 05:26, 25 சனவரி 2018 (UTC)[பதிலளி]