பேச்சு:சொற்பிறப்பியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதன், தொல்காப்பியத்தில் 'கிளவியாக்கம்' என்ற ஒன்று உள்ளது. நான் தொல்காப்பியம் படித்த பல வருடங்கள் ஆகிவிட்டதால், அதன் சரியான பொருளை மறந்துவிட்டேன். அது கூட சொறகளின் பிறப்பு பற்றி தான் என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. 'கிளவியாக்கமும்' சொற்பிறப்பியலும் ஒன்றா அல்லது வேறு வேறா தயவு செய்து எனக்கு தெளிவு படுத்தவும். நான் இயற்றிய எல்லா கட்டுரைகளிலும் Etmylogy என்ற சொல்லுக்கு கிளவியாக்கம் என்றே மொழிபெயர்த்து வந்தேன். தவறாக இருப்பின் தெரிவிக்கவும். சொல்லை மாற்றி விடுகிறேன். வினோத் 11:36, 2 டிசம்பர் 2007 (UTC)

Etmylogy உம் கிளவியாக்கமும் ஒன்றல்ல. கிளவியாக்கம் என்பது தமிழ் மொழிக்குள்ளேயே பல்வேறு இலக்கணச் சூழ்நிலைகளில் எவ்வாறு சொற்கள் உருவாகின்றன என்பதை விளக்குவதாகும். கிளவியாக்கம் சொல்லின் வரலாறு பற்றி ஆராய்வதில்லை. Etmylogy என்பது சொல்லின் வரலாறு பற்றி ஆராய்வது, தமிழில் சொற்பிறப்பியல் என்று வழங்கப்படும். இங்கே ஒரு குறிப்பிட்ட சொல்லின் வரலாறு மொழிகளின் வரம்புகளுக்கு அப்பாலும் ஆய்வு செய்யப்படுகிறது. இதிலே பல்வேறு மொழிகளிடையேயான ஒப்பீட்டாய்வுகள் முக்கியமானவை. இவ்வாய்வுகள் மூலம் ஒரு தமிழ்ச் சொல்லின் மூலத்தை அல்லது பிறப்பிடத்தை மூலத் திராவிட மொழியிலோ அல்லது வேறு மொழிகளிலோ கண்டறிய முடிவதுடன் அதன் தமிழுக்கு வெளியேயான வரலாற்றையும் அறிந்துகொள்ள முடியும். Mayooranathan 12:54, 2 டிசம்பர் 2007 (UTC)

விளக்கத்திற்கு நன்றி, கட்டுரைகளில் கிளவியாக்கம் என்பதற்கு பதிலாக சொற்பிறப்பியல் என்பதை மாற்றிவிடுகிறேன். வினோத் 12:57, 2 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சொற்பிறப்பியல்&oldid=191107" இலிருந்து மீள்விக்கப்பட்டது