பேச்சு:சூரியகாந்திக் குடும்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்புரிமை ஐயமுள்ள தரவுகள்=[தொகு]

தோற்றம்[தொகு]

அக்கரகாரம்
Anacyclus pyrethrum

வளரியல்பு[தொகு]

பெரும்பாலும் ஓராண்டு அல்லது பல ஆண்டு சிறு செடிகள் (எ.கா. யூபடோரியம் ஓடோரேட்டம்) அல்லது புதர்செடி (எ.கா. செனிசியோ) அல்லது மரங்கள் (எ.கா. வெர்னோனியா ஆர்போரியா) வேர் மற்றும் தண்டு பொதுவாக எண்ணெய் குழாய்களை பெற்றிருக்கும். பெரும்பாலான தாவரங்களில் ̈நிறமற்ற லேட்டக்சு காணப்படுகிறது.

வேர்[தொகு]

கிளைத்த ஆணி வேர்த் தொகுப்பு காணப்படுகிறது. டாலியா காக்சினியாவில் வேர்க்கிழங்குகள் காணப்படுவது குறிப்பிடதகுந்த அமைப்பாகும்.

தண்டு[தொகு]

நிலத்தின் மேல் காணப்படும். ̈நிமிர்ந்தது அல்லது தரைபடர்ந்தது அல்லது நிலம்படர் நுனிநிமிர்ந்தது. ஹீயாந்தஸ் டியூபரோசஸ் தாவரத்தில் தண்டுக் கிழங்கு காணப்படுகிறது. கிரைசாந்திமம் இன்டிகம் (அக்கரகாரம்) தாவரத்தில் தரைக் ̧கீழ் ஓடு தண்டு காணப்படுகிறது. லானியா பின்னேட்டிஃபிடா தாவரத்தில் ஓடு தண்டு காணப்படுகிறது.

இலை[தொகு]

தனி இலை. முழுமையானது அல்லது சிறகு அல்லது அங்கைவடிவ மடல்களையுடைது அல்லது கூட்டிலை. மாற்றிலையமைவு (எ.கா. வெர்னோனியா ஆர்போரியா) அல்லது எதிரிலை அமைவு (எ.கா. டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ்) அல்லது வட்டஇலையமைவு (எ.கா. யூபடோரியம் ஓடோரேட்டம்) அல்லது வேரண்மை இலையமைவு (எ.கா. லானியா பின்னேட்டிஃபிடா). இலையடி செதிலற்றது. வலை பின்னல் நரம்பமைப்பு உடையது. டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் தாவரத்தின் உடலம் மென்மையான தூவிகளால் மூடப்பட்டிருக்கும். கார்த்தாமஸ் டிங்டோரியஸ் தாவரத்தில் தூவிகள் மென்மையான முட்களாக மாறியுள்ளன.

பூந்துணர்[தொகு]

இக்குடும்பத்தின் சிறப்பு மஞ்சரி 'காபிடுலம்' அல்லது சிரமஞ்சரியாகும். சிரமஞ்சரியில். சில சிறுமலர்களிலிருந்து. பல நூற்றுக்கணக்கான சிறுமலர்கள் உள்ளன. ஆனால் 'எக்கினாம்சு' தாவரத்தின் சிரமஞ்சரி ஒரு மலராக குறுக்கம் அடைந்துள்ளது. ஒருதரப்பட்ட சிரமஞ்சரி (Homogamous head)) மற்றும் இருதரப்பட்ட சிரமஞ்சரி (Heterogamous head)) என சிரமஞ்சரி இருவகைப்படும். இருதரப்பட்ட சிரமஞ்சரியில் இருவகையான சிறுமலர்கள் காணப்படுகின்றன. (எ.கா. 'ஹீயாந்தஸ் ஆனுவசு' மற்றும் 'டிரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ்' (வெட்டுகாயப்பூண்டு). மஞ்சரியின் நடுவிலுள்ள சிறுமலர்கள் குழல் சிறுமலர்கள் அல்லது வட்டு சிறுமலர்கள் என அழைக்கப்படுகின்றன. இம்மலர்கள் இருபால் தன்மையுடையவை. விளிம்பிலுள்ள சிறுமலர்கள் நாவடிவ அல்லது கதிர் சிறுமலர்கள் எனப்படும். இச்சிறுமலர்கள் ஒருபால் தன்மையுடைய பெண் மலர்களாகும். ஒருதரப்பட்ட சிரமஞ்சரியில். அனைத்து சிறு மலர்களும் குழல் மலர்களாக உள்ளன. எ.கா. 'வெர்னோனியா ஆர்போரியா' மற்றும் 'அசிரேட்டம் மெக்சிகானம்'. 'லானியா பின்னேட்டிஃபிடா' வில். அனைத்து சிறுமலர்களும். நாவடிவ சிறுமலர்களாகும்.

மலர்கள்[தொகு]

மலர்கள் சிறியவையாதலால். சிறுமலர்கள் என அழைக்கப்படுகின்றன. சிறுமலர்கள் காம்பற்றவை. பூக்காம்புச் செதிலுடையவை (எ.கா. ஹீயாந்தஸ் ஆனுவசு) அல்லது பூக்காம்புச் செதிலற்றவை (எ.கா. டிரைடாக்ஸ் புரோக்கும்பன்சு) ஐந்தங்கமுடையவை மற்றும் ̧கீழ்மட்ட சூற்பை கொண்டவை. வட்டு சிறுமலர்கள் பொதுவாக முழுமையானவை. இருபால் தன்மையுடையவை மற்றும் ஆரச்சமச்ர்ருடையவை. கதிர் சிறுமலர்கள். முழுமையற்றவை. பெண் மலர்கள் அல்லது பால்தன்மையற்றவை மற்றும் இருபக்கச் சமச்சீருடையவை ஆகும்.

வட்டங்கள்[தொகு]

பூவிதழ் வட்டம் என்பது முக்கியமாக அல்லி வட்டத்தையும். புல்லிவட்டத்தையும் குறிக்கிறது.

புல்லி வட்டம்[தொகு]

பலச் சிற்றினங்களில் புல்லிவட்டம் குறுக்கமடைந்து எண்ணற்ற 'பேப்பசு' தூவிகளாக மாற்றமடைந்து சூற்பையின் உச்சியில் அமைந்துள்ளது. நிலைப்புத் தன்மையுடைய (Persistent) 'பாப்பஸ்' தூவிகள் 'பாராசூட்' போன்று செயல்பட்டு கனி பரவுவதற்கு உதவுகிறது.

அல்லி வட்டம்[தொகு]

அல்லிகள் ஐந்து. தொடு இதழமைவில் இணைந்தவை. குழல் சிறுமலரில் அல்லிகள் சம அளவில் குழல் வடிவிலும். நாவடிவ மலரில் அல்லிகள் சமமற்று. நாவடிவம் அல்லது ஈருதடு வடிவில் காணப்படுகிறது.

மகரந்தத்தாள் வட்டம்[தொகு]

மகரந்தத்தாள்கள் 5. அல்லி ஒட்டிய மகரந்தத்ததாள்கள். இரு அல்லி இதழ்களுக்கு இடையே அமைந்தவை. 'சின்ஜெனிசியசு' அதாவது மகரந்தப்பைகள். சூல் தண்டினைச் சூழ்ந்து இணைந்து குழல் போன்றும் மகரந்தக் கம்பிகள் இணையாமல் தனித்தும் காணப்படும். மகரந்தப்பைகள் இரு அறையுடையவை. அடி ஒட்டிய மகரந்தக் கம்பியுடையவை மற்றும் நீள்வாக்கில் வெடிக்கும் இயல்புடையவை ஆகும்.

சூலக வட்டம்[தொகு]

  • சூழகம் : கீழ்மட்ட சூற்பை. இரு சூலக இலைகளையுடையது. இணைந்த சூலக இலைகள். ஒரு சூலக அறையுடையது. சூலக அறையில் ஒரு சூல் அடிச்சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளது. சூல்தண்டு தனித்ததும், சூல்முடி இரண்டாகவும் பிளவுற்றுள்ளது.
  • கனி : 'சிப்செல்லா'. இக்கனி ̧கீழ்மட்ட சூற்பையிலிருந்து ஒரு விதையுடன் வெடியா உலர்கனியாக வளர்ச்சியடைகிறது.
  • விதை : கருவூண் அற்றது.

ஊடகங்கள்[தொகு]

பொருளாதாரப் பயன்கள்[தொகு]

எண்ணெய்த் தாவரங்கள்[தொகு]

'ஹீலியாந்தஸ் ஆனுவஸ்' (சூரியகாந்தி) தாவரவிதைகளிலி ருந்து எடுக்கப்படும் எண்ணெய், சமையலுக்குப் பயன்படுகிறது. 'கார்தாமஸ் டிங்டோரியசு' (சாஃப்ளவர்) தாவரவிதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் சமையலுக்கும் மற்றும் சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த எண்ணெயில் குறைந்த அளவு கொழுப்புயிருப்பதால் இதய நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

மருத்துவத் தாவரங்கள்[தொகு]

'எக்லிப்டா புரோஸ்ட்ரேட்டா' (கரிசலாங்கண்ணி) முழுத் தாவரமும் குளியல் எண்ணெய் தயாரிக்கவும், மஞ்சட் காமாலையைக் குணப்படுத்தவும் மற்றும் மண்ணீரல், கல்லீரல் போன்றவைகளின் செயல்பாடுகளை சரிபடுத்துவதற்கும் பயன்படுகிறது. 'ஆர்டிமிசியா மாரிட்டிமா' தாவரத்திலிருந்து கிடைக்கும் 'சான்டோனின்' என்ற மருந்து சிறுகுடலிலுள்ள வளைத்தசைப் புழுக்களை வெளியேற்றப் பயன்படுகிறது.

சாயத் தாவரங்கள்[தொகு]

'கார்த்தாமசு டிங்டோரியசு' தாவரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான சிவப்பு சாயம் பட்டு துணிகளுக்கு சாயமேற்றப் பயன்படுகிறது. 'இடாச்சிடசு எரெக்டா' தாவர மலர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மஞ்சள் சாயம், பருத்தி துணிகளுக்கு சாயமேற்ற பயன்படுகிறது.

பூச்சிக்கொல்லிகள்[தொகு]

கிரைசாந்திமம் 'சினரேரிஃபோலியம்' மற்றும் 'கி. காக்சினியம்' போன்ற தாவரங்களின் சிரமஞ்சரிகள் உலர்த்தப்பட்டு பொடி செய்யப்பட்டத்தூள். ‘பைரித்திரம்’ என்ற பெயரில் கொசு விரட்டியாக பயன்படுகிறது.

புத்துணர்ச்சித் தாவரங்கள்[தொகு]

'சிக்கோரியம் இன்டிபசு' (சிக்கரி அல்லது காசினிக் கீரை) தாவர விதைகள் பொடியாக்கப்பட்டு காஃபி தூளுடன் கலக்கப்படுகின்றன. இத்தாவரத்தின் இலைகள் பல்வேறு நோயினை குணப்படுத்தவும் உணவாகவும் பயன்படுகின்றன.

அலங்காரத் தாவரங்கள்[தொகு]

'இலியாந்தசு ஆனுவசு' (சூரியகாந்தி). 'இடாசிடசு பெட்டுலா' (ஃபிரன்ச்சு மாரிகோல்டு), 'காலெண்டுலா அஃபிசினாலிசு' (பாட் மாரிகோல்டு) மற்றும் 'சின்னியா எலெகென்சு' போன்றத் தாவரங்கள் அழகுத் தாவரங்களாக தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.