பேச்சு:சாதாரண தடிமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை இணைப்பு[தொகு]

ஏற்கனவே தடிமன் என்ற கட்டுரை இருப்பதனால், இந்தக் கட்டுரை அதனுடன் இணைக்கப்பட வேண்டும். கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், ஆங்கில விக்கியில் குறிப்பிட்ட கட்டுரைக்கு தமிழில் கட்டுரை உள்ளதா என்பதை ஒருதடவை சரி பார்த்தல் நல்லது. நன்றி.--கலை (பேச்சு) 21:37, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆம். உடன்படுகிறேன்; இந்தக் கட்டுரை தடிமன் எனும் தலைப்பில் இணைக்கப்பட வேண்டும்.
இக்கட்டுரையை இரு நபர்கள் இணைந்து ஆக்கியது போல வரலாறு காட்டுகிறது. கட்டுரை ஒரே தொகுப்பில் உருவாகி இருக்கின்றது. இவ்வாறு ஒரே தரத்தில் குறைவான தொகுத்தல்கள் அடங்கி ஒரு முழுமையான கட்டுரை இருப்பது சில சமயங்களில் "மொழிபெயர்ப்புக் கருவி" கொண்டு மொழிபெயர்த்த கட்டுரை என்று எண்ண வாய்ப்புண்டு. ஏற்கனவே இக்காரணங்களால் ஐம்பதாயிரம் கட்டுரைகளைத் தாண்டியும் ஆங்கில விக்கியின் முதற்பக்கத்தில் இருந்து தமிழ் விக்கி நீக்கப்பட்டுள்ளது (More than 50,000 articles: ). அதற்குக் கொடுக்கப்பட்ட காரணங்களில் ஒன்று தமிழ் விக்கிபீடியாவில் "மொழிபெயர்ப்புக் கருவி" கொண்டு மொழிபெயர்த்த கட்டுரைகள் (கூகிள் திட்டம்) நிறைய உண்டு என்று தானியங்கி தெரிவித்ததே.
பயனர் Wakkie1379 எனும் பெயரின் கீழ் மூவர் கட்டுரை உருவாக்கி (மொழிபெயர்த்து) இருப்பது தெரிகின்றது. தனித்தனியே பயனர் கணக்குத் தொடங்கி கட்டுரை உருவாக்குவது நன்று. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 05:59, 10 சனவரி 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாதாரண_தடிமன்&oldid=1596310" இலிருந்து மீள்விக்கப்பட்டது