பேச்சு:கே-2 கொடுமுடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’கொடுமுடி’ என்று ஒரு ஊர் இருக்கிறது. இதனைப் பிரித்துப் பார்த்தால் கொடிய + முடி என்று வருகிறது. இது சரியான பொருளை உணர்த்துவதா என சந்தேகிக்கிறேன். முகடு, உச்சி, சிகரம் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. விக்கியில் சில கட்டுரைகளில் மலைமுடி என்று உள்ளது. அதுவும் தேவையான பொருளைக் கொடுக்கிறது எனலாம்.−முன்நிற்கும் கருத்து Mageshsai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இதன் தலைப்பு வெறும் கே-2 என்றே இருக்கலாம். கட்டுரைக்குள் கே-2 என்னும் கொடுமுடி எனலாம். கொடுமுடி என்பது இங்கு சிறப்புப்பெயர். தமிழ்நாட்டில் கொடுமுடி என்னும் ஊர் இருப்பதை அறிவேன். அங்கு நான் சென்றும் வந்திருக்கின்றேன். ஆனால் இங்கு கொடுமுடி என்பது ஏறுவதற்கு மிகக்கடுமையான மலை என்னும் சிறப்புப்பொருளிலும், கொடுமுடி என்றால் முகடு, சிகரம் என்னும் பொதுப்பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. தலைப்பு வெறும் கே-2 என்று இருந்தாலும் எனக்கு ஒப்புதலே. இக்கட்டுரையை இன்னும் விரித்து எழுத வேண்டும். உலகில் அதிகமான பேர் ஏறி உயிரிழக்க நேரிட்ட கொடுமுடி என்னும் "புகழ்" கொண்டது. --செல்வா 12:21, 16 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே-2_கொடுமுடி&oldid=405346" இலிருந்து மீள்விக்கப்பட்டது