பேச்சு:கிறீஸ் மனிதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மர்ம மனிதன் அச்சுறுத்தல் எனும் தலைப்பினை 'கிறீஸ் மனிதன்' அல்லது 'கிறீஸ் பூதம்' என்று மாற்றினால் என்ன? ஏனெனில் இலங்கையில் 'கிறீஸ் மனிதன்' அல்லது 'கிறீஸ் பூதம்' என்ற வார்த்தைப் பதமே கூடுதலாக பிரயோகத்தில் உள்ளது. அதே நேரம் ஆங்கில விக்கியிலும் Grease devil (Sinhala: ග්‍රීස් යකා) எனும் வார்த்தையே சேர்க்கப்பட்டுள்ளது.--P.M.Puniyameen 07:36, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஒப்புகிறேன். பரவலாக அறியப்பட்ட “கிறீஸ் மனிதன்”/”கிறீஸ் பூதம்” பொருத்தமான தலைப்பாக இருக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 07:46, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில் “கிறீஸ் மனிதன்”/”கிறீஸ் பூதம்” பொருத்தமான தலைப்பாக மாற்றிவிடுங்களேன்--P.M.Puniyameen 08:54, 16 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]


நடப்பு நிகழ்வு குறித்த அருமையான தொகுப்பு.பாராட்டுக்கள் !!--மணியன் 04:03, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி மணியன், இப்பிரச்சினையால் எமது பகுதியும் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பிரச்சினை முடிந்த பாடில்லை. --P.M.Puniyameen 07:39, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
  • HK Arun, "மூடநம்பிக்கைகள்" என்றொரு பகுப்பு கொடுத்ததை அகற்றியிருக்கிறீர்கள். "கிறீஸ் மனிதன்" கட்டுரையை வாசிக்கும்போது அரசோ, இராணுவமோ வேறு தரப்பினரோ திட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட செயல் தெளிவாகவே தெரிகிறது. எனவே, "அரசு வன்முறை" போன்ற ஒரு பகுப்பு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இத்தகைய வன்முறைச் செயல்களை அறியாமையால் ஒருசிலர் பேயோ பூதமோ தங்களைத் தாக்க வருகிறது என்று நினைப்பதால்தான் "மூடநம்பிக்கைகள்" என்றொரு பகுப்பைப் பரிந்துரைத்தேன். அது பொருத்தமற்றது என்று கருத்து உளதென்றால் நீக்குவதற்குத் தடையில்லை. நன்றி! உங்கள் பங்களிப்புகளுக்குப் பாராட்டு!--பவுல்-Paul 15:51, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அன்புடன் ஜோர்ஜ்,

//இத்தகைய வன்முறைச் செயல்களை அறியாமையால் ஒருசிலர் பேயோ பூதமோ தங்களைத் தாக்க வருகிறது என்று நினைப்பதால்தான்...// அவ்வாறு மக்கள் நினைத்ததாகவோ, பயந்ததாகவோ தகவல்கள் இல்லை. மாறாக இதன் பின்னனியில் இருக்கும் சக்தி அரசே என்பதனையும் மக்கள் தெளிவாக அறிந்துள்ளனர். ஆனால் மக்கள் மத்தியில் இவ்வாறான ஒரு "கிறீஸ் மனிதன்" எனும் பரப்புரையை முதலில் அரச (சிங்கள) ஊடகங்களே பரப்பியுள்ளன. அதனை அரசே ஏதொவொரு திட்டம்மிட்ட காரணத்திற்காக ஒரு மூட நம்பிக்கைப் போன்று சித்தரிக்க முயல்கிறது. வெறும் வதந்திகள் என்றும் பொய் கூறி வருகிறது.

// "அரசு வன்முறை" போன்ற ஒரு பகுப்பு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்// அவ்வாறு கொடுத்தல் பொருத்தமாக இருக்கும். நடப்பது வன்முறை தான். இதனை அரச வன்முறை அல்லது அரச வன்முறை கட்டவிழ்ப்பு என்றுதான் கூறவேண்டும். நன்றி! --HK Arun 16:15, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

HK Arun இப்போதைக்கு அரசு வன்முறை எனும் பகுப்பைக் கொடுக்காமல் இருப்பது நலமென நினைக்கின்றேன். சம்பவங்களின் பின்னணி அவ்வாறு இருந்தாலும் உறுதிப்படுத்த சான்றுகள் இல்லை. சற்றுப் பொருத்திருந்து பார்ப்போம்--P.M.Puniyameen 16:36, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி புன்னியாமீன்! இந்த கிறீஸ் மனிதன் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் முனைப்பாக தொடர்ந்து இற்றைப்படுத்தி வருகிறீர்கள். மிகுந்த பாராட்டுக்கள்! --HK Arun 16:44, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிறீஸ்_மனிதன்&oldid=852618" இலிருந்து மீள்விக்கப்பட்டது