பேச்சு:எட்டு வடிவத் தடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டு வடிவ முடிச்சை பாறை ஏறுநர்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். மேல் கயிறு என்னும் முறையின் வழி பாறை ஏறும் பொழுது இடுப்பு ஏறணியில் இந்த எட்டுவடிவ முடிச்சு இட்டுக் கட்டுவது வழக்கம். படத்தில் பயனர் செல்வா பாறை ஏறும்பொழுது இம்முடிச்சு இட்டுக் கட்டிய இடுப்பணியுடன் ஏறுவதைப் பார்க்கலாம்.

Loop என்பதை வளைய(/ல்) முடிச்சு என்பது சரியாக இருக்கும். தடம் என்பதும் வளைவு என்னும் பொருள் தருமென்றாலும், பொதுப்பொருள் வண்டித்தடம் என்பது போன்ற பாதை, சுவடு, வழி என்னும் பொருள்களே என்பது என் நினைப்பு. முடிச்சுகள் பற்றி நீங்கள் எழுதத் தொடங்கி இருப்பது கண்டு மகிழ்கிறேன். இது பற்றி எழுத ஓராண்டுக்கும் மேலாக எண்னியிருக்கின்றேன். இந்த எட்டுவடிவ முடிச்சு பாறை ஏற்றத்திலும் உள்ளரங்கு சுவர் ஏற்றத்திலும் மிகவும் பயன்படும் அடிப்படையான ஒரு முடிச்சு. மிக அருமையான ஒரு முடிச்சு. நான் மேல் கயிறு (top roping) என்னும் முறைப்படி ராட்டில் சினேக்கு (ஒன்ட்டாரியோ, கனடா) இடத்தில் பாறை ஏறும் பொழுது இம் முடிச்சைத்தான் பயன்படுத்தினேன் (இவ்விடத்தில் நான் பாறை ஏறும் படம் இனைத்துள்ளேன்). இதுவே பெருவழக்கு. இம்முடிச்சு இரட்டை நீர்யானையைத் தாங்கும் என்றும் கூறுவார்கள் (கயிற்றின் தடிமனைப் பொருத்தது).--செல்வா 18:57, 26 ஏப்ரல் 2009 (UTC)

செல்வா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். உங்களுக்கு இது தொடர்பில் நேரடியான அநுபவம் இருப்பதால் இத்தலைப்புக்களில் எழுதுவதற்கு உங்களுக்குக் கூடிய தகுதி உண்டு. எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள். "தடம்" என்பது இலங்கைத் தமிழில் அன்றாடம் புழங்கும் சொல். ஒரு முனையில் பிடித்து இழுத்துச் சுலபமாக அவிழ்க்கக்கூடிய loop முடிச்சை "உருவு தடம்" என்போம். "கண்ணி" என்னும் சொல்லும் loop என்பதைக் குறிக்கப் பயன்படுகிறது என எண்ணுகிறேன். "கண்" என்னும் வேரிலிருந்து பிறந்திருக்கக்கூடும். "தடம் போட்டு" அல்லது "கண்ணி வைத்து" விலங்குகளைப் பிடித்தல் என்பதுவும் இந்த loop இன் அடிப்படையிலானதே. ஆனால் விக்சனரியில், Hitch என்பதற்கு இணையாகக் "கண்ணி முடிச்சு" என்ற சொல் தரப்பட்டுள்ளது.

நீங்கள் இணைத்துள்ள பாறை ஏறும் படம் நன்றாக உள்ளது. இது எப்போது எடுத்த படம்? பாறையேற்றம் குறித்தும் எழுதுங்களேன். மயூரநாதன் 19:25, 26 ஏப்ரல் 2009 (UTC)

தடம் என்னும் சொல் இலங்கையில் வழக்கில் இருந்தால் கட்டாயம் தொடர்ந்து பயன்படுத்துவோம். கண்ணி என்னும் சொல்லையும் பயன்படுத்துவதைக் கண்டிருக்கின்றேன். மீனவர்கள், மரமேறிகள் போன்றவர்களிடம் இச்சொற்கள் பெரும் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மயூரநாதன், நான் பாறை ஏறும் அப்படம் 2004 இல் எடுத்தது. பாறை ஏற்றம் பற்றி எழுதுகிறேன். அதிக துய்ப்பறிவெல்லாம் கிடையாது, ஆனால் ஓரளவுக்கு அறிமுகம் உண்டு. நீங்கள் முடிச்சுகள் பற்றி தமிழ் விக்கியில் எழுதுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. இது பற்றிய கணக்கியல் துறைகள் செய்திகளும் வியப்பூட்டுவன. விளையாட்டு, புதிர்களும் உண்டு. உயிரியலில் புரதப்பொருள் மடிந்து முடிச்சு விழும் முறைகளிலும், டிஎன்ஏ மடிப்புகளின் வழி முடிச்சுகள் விழுவதும் ஆக பல சுவையான கருத்துகள் உள்ளன. பொது மகக்ளுக்கு ஆர்வம் தூண்டக்கூடியதும், பொதுவாகப் பயன்படக்கூடியது ஆகும் இத்துறை.--செல்வா 19:49, 26 ஏப்ரல் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எட்டு_வடிவத்_தடம்&oldid=371364" இலிருந்து மீள்விக்கப்பட்டது