பேச்சு:இராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜஸ்தான் மாநிலம் ராஜஸ்தான் என்றே இருக்கலாம் தவறில்லை. அது அங்கு அப்படித்தான் அழைக்கப்படுகின்றது. அது வட மொழி உச்சரிப்பு எழுத்திற்காக மட்டும் அங்கு மாஈற்றியிருக்கின்றீர்கள். இந்த எழுத்துக்கள் தடை செய்யப்படவில்லை இந்த எழுத்துக்களைப் பயன் படுத்தக் கூடாது என்று எந்த ஆணையும் இல்லை. வினைச் சொல், பண்புப் பெயர் எதனையாவது குறிக்கின்றதா? இராஜஸ்தான் என்று வழங்குவதற்கு அந்த கட்டுரையில் வரலாறு உள்ளது. உயர் நீதிமன்ற கட்டுரையும் அப்படித்தான் உள்ளது. மனித உரிமை ஆணையம் இது அப்படியே இருக்கலாம். இராசத்தான் எந்தப் பொருளையாவது குறிக்கின்றதா? விளக்கவும்.--செல்வம் தமிழ் 02:30, 25 ஏப்ரல் 2009 (UTC)

தமிழில் ராஜா, இராஜா என்பதை இராசா என்றே குறிப்பர். தமிழ் எழுத்துக்கள் 247. நாளை ஒருவர் வந்து fரான்சு என்று எழுதலாம், அதற்கு தடை உண்டா என்று கேக்கலாம். தமிழ் வரலாற்றை உற்று நோக்கினால் தமிழ் அறிஞர்கள் தமிழின் அழகை தனித்தன்மையை இலக்கணத்தை எந்தளவு போராடி பாதுகாத்தார்கள், மீட்டார்கள் என்று புரியும். இல்லை, இப்படித்தேன் எழுதுவேன் என்றால், அதற்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு என்பது யார் சொல்லியும் தெரியத் தேவை இல்லை. தமிழ் எழுத்துக்களால் எழுதவும் உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்க. --Natkeeran 02:40, 25 ஏப்ரல் 2009 (UTC)