பேச்சு:இந்தி எதிர்ப்புப் போராட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]

இங்கு நடந்த உரையாடலின் படி இந்த தவறான வழிமாற்றுகளை கூட விட்டு வைக்கக்கூடாது. இதை நான் ஏற்கனவே தெரிவித்தும் அதை கவனியாமல் சோடாபாட்டில் இதை மீள்வித்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் மீண்டும் பக்கத்தை அழிக்கிறேன். பேச்சுப்பக்கம் இருக்கட்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:39, 20 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

தென்காசி, நீங்கள் அந்த வழிமாற்றை நீக்கியது சரியாகவே இருக்கலாம். ஆனால் அவ்விணைப்பு ஏராளமான கட்டுரைகளில் இப்போது சிவப்பு இணைப்புகளாகத் தெரிகின்றன. அவற்றை என்ன செய்வது? யாரும் (தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் என்றால் நல்லது) அவ்விணைப்புகளை புதிய தலைப்புக்கு மாற்ற வேண்டும். அல்லது மீண்டும் வழிமாற்று ஏற்படுத்த வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 07:11, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
தவிரவும் இத்தலைப்பில் கட்டுரை இல்லையென்றால் புதிய பயனர்கள் மீண்டும் மீண்டும் இத்தலைப்பில் கட்டுரைத் துவக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழகத்தில் பரவலாக, அரசியல்படி சரியில்லாதபோதும், இந்த உள்ளடக்கங்கள் இத்தலைப்பிலேயே உரையாடப்படுகின்றன. குறைந்தது வழிமாற்று இருந்தாலாவது புதிய தலைப்பிற்கு மாற்றப்பட்டு தங்கள் தவறை உணர்வர்.--மணியன் (பேச்சு) 07:43, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
இந்தித் திணிப்பு போராட்டம் விரும்பியோ விரும்பாமலோ இந்தி எதிர்ப்பாகவே மாறி விட்டது.--Kanags \உரையாடுக 08:24, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

//ஏராளமான கட்டுரைகளில் இப்போது சிவப்பு இணைப்புகளாகத் தெரிகின்றன// //அல்லது மீண்டும் வழிமாற்று ஏற்படுத்த வேண்டும்.//

இது போல் பல்வேறு இணைப்புகள் உள்ளன. அதனால் இதைக்காரணம் கொண்டு வழிமாற்று அமைக்கவேண்டும் என்பது சரியான வழிமுறையாகத் தெரியவில்லை. ஆனால் தானியங்கி கணக்கில் உள்ளவர்கள் இந்தத் தலைப்புக்கு மட்டும் சிவப்பிணைப்புகளை மாற்றச்சொல்லலாம்.

நான் தற்போது நிர்வாகி மட்டும் தொகுக்கும் மாதிரி இப்பக்கத்தை மாற்றியுள்ளேன். புகுபதிகை செய்தவர்க்கு இப்பக்கத்தில் கட்டுரை தொடங்கமுடியாது. நிர்வாகியில்லாதவர்கள் யாராவது முயற்சி செய்து பார்க்கவும். நான் ஆங்கில விக்கியில் வர்ணாசிரமம் தொடர்பாக உரையாடிக்கொண்டிருக்கும் போது அந்த அழிக்கப்பட்ட வழிமாற்றுப் பக்கத்தில் வேறொரு வார்ப்புரு இடப்பட்டிருந்தது. அதை வேண்டுமானால் இங்கு இடலாம் என நினைக்கிறேன்.

//குறைந்தது வழிமாற்று இருந்தாலாவது புதிய தலைப்பிற்கு மாற்றப்பட்டு தங்கள் தவறை உணர்வர்.//

இதுக்கு இன்னொரு வழி இப்போது என் மண்டையில் பல்பியது. நாளை வருகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:00, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

சரி தென்காசி, இருக்கும் வேலைகளில் இதுவும் ஒன்றாக நானே அந்த இணைப்புகளை சரி செய்து விடுகிறேன். நன்றி ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு எக்காலமும் இருந்ததில்லையா என்பதைத் தெரிந்தவர்கள் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 20:37, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
உங்கள் கருத்து ஒன்றை வேறொரு பக்கத்தில் பார்த்தேன். இந்தித் திணிப்பே இந்தி எதிர்ப்புப் போராட்டமாக ஊடகங்களில் பரவலாக அறியப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். எனவே விக்கிப்பீடியா கொள்கைப்படி, அது பற்றிக் குறிப்பிடப்பட வேண்டுமா இல்லையா? குறிப்பிடப்பட வேண்டும் என்றால் வழிமாற்றும் இருப்பதில் தவறில்லை தானே?--Kanags \உரையாடுக 20:52, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

வழிமாற்று மேலே இக்கினியோண்டுதான் தெரிகிறது. வருபவர்கள் மாற்றப்பட்ட தலைப்பைப் பார்ப்பாரகளா என்பதில் ஐயம் தான்.

//எனவே விக்கிப்பீடியா கொள்கைப்படி, அது பற்றிக் குறிப்பிடப்பட வேண்டுமா இல்லையா? //

கட்டுரையில் குறிப்பிட்டால் அது சரிதான். ஆனால் தவறான பொருள் தரும் வழிமாற்றுகள் வைக்க வேண்டாம் என்பது தான் ஆங்கில விக்கியிலும் சொல்கிறார்கள். தொலைநோக்கோடு பார்த்தால் சரியாக இருக்கும். இன்னும் இதைப் போல் சிலப் பெயர்கள் உள்ளன. நினைவு வந்ததும் சொல்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:31, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

நாம் இங்கு கொள்கை வகுத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்ய முற்படுகிறோமா அல்லது தகவல் பரிமாறுகிறோமா?--Kanags \உரையாடுக 21:43, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]