பேச்சு:ஆல்ட்டன் ஆர்ப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை மேலும் விரைவில் விரிவாக்கப்படும். இது எனது முதல் முழுமை வாய்ந்த முயற்சி எனக் கருதுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:28, 26 மே 2015 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை:, இங்கு நான் செய்துள்ள திருத்தங்களக் கவனியுங்கள்.-- நன்றி.--Kanags \உரையாடுக 10:14, 26 மே 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:03, 26 மே 2015 (UTC)[பதிலளி]

Pulsar-துடிப்பு விண்மீன்கள்,சுருக்கமாக, துடிமீன் எனலாம். quasar-போலி உடுக்கணவெளிப் பொருள்கள்.இவை விண்மீன்களல்ல. மாறாக விண்மீன்களைப் போல கதிர்வீச்சுமிழும் திறம் வாய்ந்த உடுக்கணவெளியில் நிலவும் கதிரியக்கப் பொருட்குவைகள்.எனவே இவற்றை போலிமீன்கள் அல்லது சுருக்கமாக,போன்மீன்கள் எனலாம்.துடிப்பண்டம் போன்மீன்கள் எனத் திருத்தியுள்ளேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:40, 30 மே 2015 (UTC)[பதிலளி]

பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை: துடிப்பு விண்மீனை துடிமீன் என்றும் போலிவிண்மீனை போலிமீன் என்றும் போன்மீன் என்றும் சுருக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இதனால் அவற்றின் அர்த்தங்களை உடனடியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. விண்மீன் என்றில்லாமல் மீன் என்று கூறுவதால் மீன் என்ற உயிரினத்தைப் பற்றியதாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். அது மட்டுமல்ல, வருங்காலத்தில் புதிய வகை மீன் உயிரினங்களுக்கு கலைச்சொல்லுருவாக்கத்துக்கு இவை தடையாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.--Kanags \உரையாடுக 09:05, 30 மே 2015 (UTC)[பதிலளி]

இரண்டையும் சுருக்காமலே போலி விண்மீன், துடிப்பு விண்மீன் என்றே பயன்படுத்துவோம். விளங்குவதற்காக ஒருசொல்லை இருசொல்லால் குறிப்பதில் எந்த மறுப்பும் இல்லை. நன்றிகளுடன், உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:27, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆல்ட்டன்_ஆர்ப்&oldid=1861832" இலிருந்து மீள்விக்கப்பட்டது