பேச்சு:ஆரிய அரசன் பிரகத்தன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இவ்வரசன் பிரகதத்தன் என்றே குறிப்பிடப்படுகிறான். பிரகத்தன் அன்று. மேலும்,
  • குறிஞ்சிப்பாட்டில் ஆரிய அரசனைப் பற்றியோ, பிரகதத்தனைக் குறித்தோ யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்வரசனைப் பற்றிய வரலாறும் இந்நூலூள் ஒன்றுமில்லை. “ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டிற்கு முற்றிற்று“ என்று நச்சினார்க்கினியர் உரையின் முடிவில் காணப்படுகின்றது. இந்நூல் ஆரிய அரசன் பிரகதத்தன் மீது பாடப்பட்டது என்பதற்கு இதனைத் தவிர பிற சான்றுகளும் இல்லை.
  • ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன் எனும் அரசன் பெயர் குறுந்தொகையில் காணப்படுகின்றது. குறுந்தொகையின் 184-ஆவது பாடல் இவ்வரசனால் பாடப்பட்டது. இவ்வரசன் தமிழ்ப்புலவனாக விளங்கியுள்ளான் என்பதற்கு மேற்குறித்தவையே சான்றுகளாகும்.[1]
  • மேலும் கம்ப இராமாயனத்தில் சம்புமாலி என்பவன் பிரகதத்தன் மகன்;அனுமனால் அழிந்த அரக்கன் என்ற குறிப்பு காணப்படுகிறது[2]

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:59, 12 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மேற்கோள்[தொகு]

  1. முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை அவர்கள் எழுதிய திண்ணை இதழ் கட்டுரை -செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
  2. http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=789