பேச்சு:அம்பாறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பாறை என்ற தலைப்பில் தரப்பட்ட கட்டுரை க்குரிய படம் முழு அம்பாரை மாவட்டத்தையூம் குறிப்பதாகக் கருதுகிறேன். தயவு செய்து பொருத்தமான படமொன்றை இணைக்க உதவவும்--சஞ்சீவி சிவகுமார் 19.04.2010

வணக்கம் சஞ்சீவி, அம்பாறை நகரைக் காட்டும் படத்தை இணைத்திருக்கிறேன். பாருங்கள். அம்பாறையை ஏன் அம்பாரை என எழுதுகிறீர்கள்? தமிழில் அம்பாரை எனவா அங்கு எழுதப்படுகிறது?. மேலும் மபேச்சுப் பக்கங்களில் உங்கள் கையொப்பத்தி இடுவதற்கு ~~~~ எனக் குறிப்பிட்டால் போது. உங்கள் கையொப்பம் பதிவாகிவிடும்.--Kanags \உரையாடுக 08:55, 19 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் சிறிதரன் அம்பாறையை அம்பாரை என எழுதுவதாகக் கேட்கப்பட்ட கேள்வி கொண்டுள்ள அர்த்தப்பாட்டை இப்போது தான் உணர்கிறேன். நான் சிறுவயதில் இருந்த போது பொதுவான உச்சரிப்பு அம்பாரை என்றுதான் இருந்தது. பின் சிங்கள ஆதிக்கம் மேலோங்கியபோது இது அம்பாறை என்ற உச்சரிப்புக்குள் உள்வாங்கப்பட்டதுபோல நான் உணர்கிறேன்.உண்மையான பெயரை அறுதியிட்டுக் கூற இப்போதைக்கு எனக்குத் தெரியவில்லை. தேடலுக்கு வழிவகுத்த உங்களுக்கு நன்றி;கையெப்ப அழுத்தியை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 06:27, 20 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அம்பாறை&oldid=512592" இலிருந்து மீள்விக்கப்பட்டது