பேச்சு:அடிப்படைச் சான்றுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு வளம் என்ற சொல் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றவில்லை. முதல்நிலைத் தகவல் தளம் என்றோ அல்லது முதல்நிலைத் தகவல் மூலம் என்றோ இருப்பது தெளிவாக இருக்கும் என எண்ணுகிறேன்.--மணியன் 04:02, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

  • Primary sources - முதனிலை அல்லது முதன்மைச் சான்றுகள்
  • Secondary sources - இரண்டாம் நிலைச் சான்றுகள்

--பாஹிம் (பேச்சு) 10:17, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

மேலும் இங்கே முதனிலை என்று சேர்த்து அல்லது முதல் நிலை என்று பிரித்து வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 10:34, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
  • கட்டுரையில் அடிப்படைச் சான்று என்பது சமகாலச் சான்று என விளக்கப்பட்டுள்ளது. மற்றையது சார்புச் சான்று என்றும் காட்டப்பட்டுள்ளது. இவை தெளிவான சுருக்கமான நற்றமிழ்ச் சொற்கள். Ph.D. ஆய்வாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் பொதுச்சொற்கள். தகவல் என்பதும் வளம் என்பதும் பொருத்தமற்ற மிகை. தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. வருந்துகிறேன். என்னை அடித்தால் அழலாம். தமிழை அடிப்பவர் நற்கீரன் ஆயிற்றே. என்ன செய்வேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:45, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
  • Primary, Secondary என்பனவற்றைச் சொல்வழி மொழிபெயர்ப்புச் செய்தல் நன்றன்று. பயன்பாட்டு நோக்கில் தமிழாக்குங்கள். தமிழ் விளங்கும். தமிழ் வளரும். அகர முதல, ஆதிபகவன் முதற்று, இவை முதல்நிலையை உணர்த்துவன. வடமொழியில் இதனை மூலம் என்பர். முதல்நிலைச் சான்று, பின்னிலைச் சான்று என இவற்றை விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 19:03, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]