பெர்சி கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெர்சி (Bersih) என்பது மலாய் மொழியில் "தூய்மை" எனப் பொருள்படுவதாகும். பெர்சி கூட்டணி மலேசியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அரசு சார்பிலா அமைப்புகளும் இணைந்து அந்நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக ஏற்படுத்தியக் கூட்டணியைக் குறிக்கிறது. குறிப்பாக இந்தக் கூட்டணி கோரும் சீர்திருத்தங்கள்:

  • அழியா மை பயன்படுத்தி ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே இடுமாறு செய்தல்.
  • வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்து இறந்தவர்களையும் செல்லாத தரவுகளையும் நீக்குதல்.
  • தவறாகப் பயன்படுத்துதல் எளிதாக இருப்பதால் அஞ்சல் வாக்குகள் நீக்கப்பட வேண்டும்.
  • மிக முக்கியமாக அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களில் சமமான வாய்ப்பளித்தல்

இதன் தற்போதைய தலைவராக முன்னாள் வழக்கறிஞர் கழக தலைவர் அம்பிகா சீனிவாசன் இயங்கி வருகிறார்.

பொருளடக்கம்

[தொகு] நவம்பர் 10, 2007

நவம்பர் 10, 2007 அன்று பெர்சி ஓர் பேரணியை கோலாலம்பூரின் தடரன் மெர்டெகா (விடுதலை சதுக்கம்)விலும் இஸ்டானா நெகரா (தேசிய அரண்மனை)யிலும் அனுமதியின்றி நடத்தியது. இந்த சட்ட விரோத பேரணியை மலேசிய காவல்துறை கண்ணீர் புகைகுண்டுகளாலும் வேதி வீசலாலும் விரட்டியடித்தது. இரண்டு பெண்கள் உட்பட 15 பேரை கைது செய்தது.

[தொகு] சூலை 9, 2011

தனது முதல் பேரணியை அடுத்து தேர்தல் ஆணையராக இருந்த அப்துல் ரசீத் அப்துல் ரகுமானின் பதவியை அரசு நீட்டித்தால் மீண்டும் தெருப்போராட்டங்களில் ஈடுபடுவோமென பெர்சி அறிவித்தது. நவம்பர் 20, 2007 அன்று பிரதமரின் துறை அமைச்சர் நசிரி அசீஸ் தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் ஓய்வு வயதை 65இலிருந்து 66ஆக மாற்றும் அரசியலமைப்பு திருத்தம் சட்டவரைவை கொண்டு வந்தார். இதனை நாடாளுமன்றம் திசம்பர் 11 அன்று நிறைவேற்றியது.[1]

இதனால் 2012ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மலேசிய தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக பெர்சி தனது இரண்டாவது தெருப் போராட்டத்தை சூலை 9, 2011க்கு திட்டமிட்டது. இந்தத் திட்டங்களை அரசு மற்றும் அரசு சார்பு அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன; இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே பல பெர்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னருடன் இது குறித்து உரையாட அனுமதி கிடைத்த பின்னர், பெர்சி தெருக்களில் பேரணி நடத்துவதற்கு மாற்றாக உள்ளரங்கம் ஒன்றில் நடத்த சூலை 5, 2011 அன்று உடன்பட்டது. [2][3]

மெர்டெகா விளையாட்டரங்கத்தில் நடந்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஆயினும் இவர்கள் விளையாட்டரங்கினுள் கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல பெர்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள், அம்பிகா உட்பட, கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் 1400க்கும் கூடுதலானவர்களை கைது செய்துள்ளது.


[தொகு] மேற்கோள்கள்


[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சி_கூட்டணி&oldid=817666" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்