பெரியவர் முத்துசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியவர் முத்துசாமி- எழில் கொஞ்சும் நாஞ்சில் நாட்டின் தலைநகர் நாகர்கோவிலின் வடசேரிப் பகுதியில் சுப்பிரமணியன்-பொன்னம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி.இளமையில் வடசேரி அரசுத் தொடக்கப்பள்ளியிலும்,கோட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் நாகர்கோவில் இசுகாட் கிருத்துவக் கல்லூரியிலும் அதன்பின் மதுரை அமேரிக்கன் கல்லூரியும் படிப்பைத் தொடர்ந்தார்கள்.படிப்பை முடித்ததும் புதிதாகத் தொடங்கப்பட்ட எஸ.எம். ஆர் வி.பள்ளியில் ஆசிரியப் பணியினைத் தொடங்கினார்.

குடும்பம் வள்ளியம்மையை கரம்பற்றி இல்லறம் தொடங்கினார். கணவரின் பாங்கறிந்து ஒழுகும் அவர்,கணவருக்கு அனைத்து வகையிலும் உதவினார்.அவர்களுக்கு 5 ஆண் ,4 பெண் மக்கள். பெரிய குடும்பப் பொறுப்புடன் சமூகப் பொறுப்பையும் ஏற்றார்

பொதுப்பணி முத்துசாமி. திருவிதாங்கூர் மாநிலக் கைத்தறிஆலோசனைக் குழுத் தலைவர், தி. மா. நூல்-ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர், நாகர்கோவில் நூல் வியாபாரிகள் சங்க செயலர் ,நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினர், பகுதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுசங்கத் தலைவர், வடசேரி கூட்டுறவுச் வங்கி நிறுவனர், மேலாளர், எஸ. எம் ஆர் வி . பள்ளி என பலபல பொறுப்புகளை ஏற்று மிகத்திறம்பட செயல் பட்டார்.

வடசேரிப் பகுதியில் தனித்தனியாகப் பிரிந்து இருந்த சாலியர் சமூக மக்களை ஒற்றுமையுடன் இணைத்தார்.அவர்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற பல உதவிகளைச் செய்தார்.

பாராட்டுகள் இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைத்தது.அவரது பெரும் பணியினை பாராட்டி பொன்னாடைப் போர்த்தி பொற்கிழி அளித்து 4-9-1981 விழா எடுத்தனர் மக்கள்.இவரது சீரிய முயற்சியால் எஸ. எம். ஆர். வி. பள்ளியில் பிரசிடென்ட் நாயனார் நினைவு கட்டிடம் எழுந்த்து. தனது தள்ளாத வயதிலும் சமுதாயத்திற்காக உழைத்தார். அவர் 2-2-1988 இயற்கை எய்தினார்.

வடசேரி மக்கள் அவரை பெரியவர் முத்துசாமி என்றே அழைத்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியவர்_முத்துசாமி&oldid=3133301" இலிருந்து மீள்விக்கப்பட்டது