பெனைன்சு மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வடக்கு இங்கிலாந்தின் பெனைன்சு மலைத்தொடர்

பெனைன்சு (Pennines) என்பது இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைத்தொடர். பீக் மாவட்டத்திலிருந்து யோர்க்சையர் டேல்சு, பெரும் மான்செஸ்டர், இலங்காசையரின் மேற்கு பெனைன் மேட்டுப்பகுதிகள், கும்பிரியா ஃபெல்கள் வழியாக இசுக்காட்லாந்து எல்லையில் உள்ள செவியட் குன்றுகள் வரை இடைவெளியின்றி அமைந்துள்ள இம்மலைத்தொடர் பல நேரங்களில் "இங்கிலாந்தின் முதுகெலும்பு" எனக் குறிக்கப்படுகிறது[1][2][3] . இந்த மலைத்தொடர் ஏறத்தாழ 250 மை (402 கிமீ) நீளமுள்ளது.

பெனைன்சின் பகுதிகள் பீக் தேசியப் பூங்கா, யார்க்சையர் தேசியப் பூங்கா மற்றும் நார்த்தம்பர்லாந்து தேசியப் பூங்காக்களின் அங்கமாக உள்ளன.[4] பிரித்தானியாவின் முதல் தொலைதூர நடைபாதை, பெனைன் வழி (Pennine Way), பெனைன்சு மலைத்தொடர் வழியாக 429 kilometres (268 mi) தொலைவிற்குச் செல்கிறது.[5]

பெயர்க்காரணம்[தொகு]

பெனைன்சின் காட்சிகளுக்கு ஓர் காட்டாக.

பெனைன்சு என்ற பெயர் "குன்று" எனப்பொருள்படும் பென்னியோரோசெசு எனும் செல்திக்கு மொழிச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த மலைத்தொடரை இப்பெயரில் குறிப்பிடப்படும் முதல் குறிப்புகள் 18வது நூற்றாண்டிலிருந்தே காணப்படுகின்றன.

உயரமும் அளவும்[தொகு]

இந்த மலைகள் பெரிய உயரங்களை எட்டுவதில்லை; பெரும்பாலும் குன்றுகள் என்றே அழைக்கப்படுகின்றன. கிழக்கு கும்பிரியாவில் 893 மீ (2 அடி) உயரமுள்ள கிராஸ் ஃபெல்லே மிகவும் உயரிய சிகரமாகும். மற்ற மலைச்சிகரங்கள் மிக்கெல் ஃபெல் 788 மீ (2 அடி), வெர்ன்சைடு 736 மீ (2 அடி), இங்கில்பரோ 723 மீ (2 அடி), பென்-யி- கென்ட் 693 மீ (2 அடி), மற்றும் கிண்டர் இசுகவுட்டு 636 மீ (2 அடி) ஆகும்..

பெனைன்சின் பெரும்பாலான நிலக்காட்சிகள் மேட்டுப்புற புதர்வெளிகளாகும். இது இங்கிலாந்தின் ஆறுகளை நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் மேற்குப் பகுதிக்குமாகப் பிரிக்கிறது. ஈடன் ஆறு, ரிப்பிள் ஆறு, மெர்சி ஆறு என்பன மேற்கு நோக்கி ஓடி ஐரியக் கடலில் கலக்கும் ஆறுகளாவன; டைன் ஆறு, டீசு ஆறு, இசுவேல் ஆறு கால்டர் ஆறு, அயர் ஆறு, டான் ஆறு, டிரென்ட் ஆறு என்பன கிழக்கு நோக்கி ஓடி வடகடலில் கலக்கும் ஆறுகளாவன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Poucher, W.A. (1946). The Backbone of England. A photographic and descriptive guide to the Pennine range from Derbyshire to Durham.. Guildford and Esher: Billing and Sons Limited 
  2. Edwards, W.; Trotter, F.M. (1975). The Pennines and Adjacent Areas. Handbooks on the Geology of Great Britain (Third ed.). London: HMSO (published 1954). p. 1. ISBN 0-11-880720-X 
  3. "Pennines -- Britannica Online Encyclopedia". பார்த்த நாள் 2008-02-28.
  4. "Designated Landscapes Index". Natural England. பார்த்த நாள் 2007-12-02.
  5. "Trail stats, Pennine Way". National Trails Homepage. The Countryside Agency. பார்த்த நாள் 2007-08-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெனைன்சு_மலைத்தொடர்&oldid=1397172" இருந்து மீள்விக்கப்பட்டது