பெத்த கோனேடி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெத்த கோனேடி நாயுடு இவர் பெனுகொண்டாவை தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவர்.[1] இவரது ஆட்சிக் காலம் 1635 முதல் 1652 வரை ஆகும். இவர் விஜயநகரத்துப் பேரரசரான பேடா வெங்கட ராயனிடம் படைத் தளபதியாக இருந்து பின்னர் அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். பேடா வெங்கட ராயன் இவரை பெனுகொண்டாவின் இராஜப்பிரதிநிதி நியமித்தார்.மேலும் இவருக்கு மகா இராஜா இராஜா சிறி என்ற பட்டத்தை அளித்து, கோனேடி நாயுடுவின் திருமணத்தை நடத்திவைத்தார். இவர் சந்திரகிரியின் கனக நாயுடுவின் கொள்ளுப் பேரனும், அக்கப்ப நாயுடுவின் பேரனும் கஸ்தூரி நாயுடுவின் மகனும் ஆவார். இவர் பலிஜா சாதியின் வாரணாசி குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2] இவரது முன்னோர்கள் சந்திரகிரி ஆண்டு வந்த விஜயநகர மன்னர்களிடம் மிகவும் விசுவாசமாக பணியாற்றியவர்கள் ஆவார். பிறகு இவர் தான் மேற்பார்வையிட்ட பகுதியில் சுதந்திர அரசை நிறுவிக்கொண்டார். இவர் கொடுங்கோல் ஆட்சியாளரான பொம்மல்லா என்பவரை போரில் வென்று இராயதுர்கம் கோட்டையை கைப்பற்றினர்.[3] இவருக்கு பின் இவரது வழித்தோன்றல்களான ஸ்ரீ வெங்கடபதி நாயுடு, பெத்த திம்மப்ப நாயுடு, வெங்கடபதி நாயுடு, கோனேட்டி நாயுடு, ராஜகோபால நாயுடு, திம்மப்ப நாயுடு ஆகியோர் பெனுகொண்டாவை ஆட்சி செய்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rangachar Vasantha, தொகுப்பாசிரியர் (2000). Penugonda Fort: A Defence Capital of the Vijayanagara Empire. 1. Sharada Publishing House. பக். 74. https://books.google.co.in/books?id=8VNuAAAAMAAJ. 
  2. M. H. Rāma Sharma, தொகுப்பாசிரியர் (1978). The History of the Vijayanagar Empire: Decline and disappearance, 1569-1679. 1. Popular Prakashan. பக். 287. https://books.google.co.in/books?id=ow5DAAAAYAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்த_கோனேடி_நாயுடு&oldid=3834088" இலிருந்து மீள்விக்கப்பட்டது