பலிஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலிஜா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம்
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கவரா, கொல்லா, கம்மவார்
பலிஜா திருமணத் தம்பதியர் 1900கள்

பலிஜா (Balija) எனப்படுவோர் தமிழகம், கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வாழும் ஒரு வணிக சமூகமாகும்.[1] இவர்களுள் பெரும்பாலானோரின் தாய்மொழி தெலுங்கு மொழியாகும். கன்னடம் பேசும் பலிஜா சமூகத்தினர் கொங்கு நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நாயுடு, நாயக்கர், ரெட்டி, செட்டியார் மற்றும் ராவ் இவர்களது பட்டங்களாகும்.

சொற்பிறப்பு

பலிஜா என்றால் வணிகன் என்று பொருளாகும். பலிஜா என்பது இடைக்கால பயன்பாட்டில் இருந்த சொற்களாலான பலஞ்சா, பனாஞ்சா, பளஞ்சா, பனஞ்சு, வளஞ்சியர் போன்ற சொற்களின் திரிபாகும். இவை அனைத்தும் வடமொழி சொல்லான வனிஜ் என்பதிலிருந்து பெறப்பட்டவையாகும்.[2]

பலிஜா என்றால் யாகம் செய்த பொழுது தோன்றியவர்கள் என்று பொருள். அதாவது சமஸ்கிருத வார்த்தை பாலி - யாகத்தையும், ஜா - பிறந்ததையும் கொண்டு பெறப்படுகிறது.

பூர்வீகம்

அய்யபொழில் என்ற வணிகக்குழுவினர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வணிகம் செய்தனர்.[3] கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, ஆந்திர நாட்டில் வீர பலஞ்சா என்ற வணிகக்குழுவினரை பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகள் தோன்றத் தொடங்கின. வீர பலஞ்சா வணிகர்களின் தலைமையிடமாக அய்யபொழில் திகழ்ந்தது.[4] அய்யபொழில் என்பது தற்கால கருநாடக மாநில பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐஹோல் நகரமாகும்.[5] வீர பலஞ்சா வணிகர்கள் தங்களை அய்யபொழில் நகரத்தின் அதிபதி என்று அழைத்துக்கொள்கின்றனர். இந்த வணிகர்கள் தங்களை வீர பலஞ்சா தர்மத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டனர்.[6] இவ்வணிகர்கள் தெலுங்கில் வீர பலிஜா என்றும் கன்னடத்தில் வீர பனாஜிகா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர். இதன் பொருள் தீரமிக்க வணிகர்கள் என்பதாகும்.[7][8]

பலிஜாவின் பிரிவுகள்

  • பலிஜா எனப்படுவோர் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் காப்பு இனத்தின் ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்.[9] இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் முற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ளனர். இவர்களின் குடும்ப தெய்வமாக வெங்கடாசலபதியை வழிபடுகின்றனர்.[10] இவர்கள் வைணவ நெறிகளைப் பின்பற்றுகின்றனர். இவ்வினத்தவர்கள் ஆந்திர மாநிலத்தின் இராயலசீமை பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.[11]
  • கவரா எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர்.[12] இச்சமூகத்தினர் பலிஜா இனத்தின் உட்பிரிவினராக உள்ளனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[13] பலிஜா என்ற சொல்லின் தமிழ் வடிவமே கவறை என்பதாகும். கவரா மற்றும் பலிஜா இன மக்களின் பழக்கவழக்கங்களும் கலாசார பண்பாடுகளும் ஒத்து இருக்கின்றனர்.[14]

அரச வம்சங்கள்

விஜயநகர மன்னர்களால் பேரரசுக்கு உட்பட்ட மாகாணங்களை மேற்பார்வையிட அரசுப் பிரதிநிதிகளை நியமித்தனர். ஆயினும் தலைக்கோட்டை போருக்கு பின்னர் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைத்தது. விஜயநகர மன்னர்களால் நியமிக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகள் தாங்கள் மேற்பார்வையிட்ட மாகாணங்களில் சுதந்திர அரசுகளை நிறுவிக் கொண்டனர். அவ்வாறு பலிஜா இனக்குழுவைச் சேர்ந்தவர்களால் நிறுவப்பட்ட அரச வம்சங்கள் பின்வருவன. [15]

குறிப்பிடத்தக்க நபர்கள்

அரசர்கள்

ஜமீன்தார்கள்

அரசியல்வாதிகள்

மேற்கோள்கள்

  1. Jakka Parthasarathy, தொகுப்பாசிரியர் (1984). Rural Population in Indian Urban Setting. B.R. Publishing Corporation. பக். 52. https://books.google.co.in/books?id=KLwiAAAAMAAJ. "Balija are the chief Telugu trading caste , scattered ! throughout Andhra Pradesh , Karnataka and Tamil Nadu" 
  2. Burton Stein, ‎David Arnold, தொகுப்பாசிரியர் (2010). A History of India. John Wiley & Sons. பக். 120. https://books.google.co.in/books?id=QY4zdTDwMAQC. 
  3. K. Sundaram, தொகுப்பாசிரியர் (1968). Studies in Economic and Social Conditions of Medieval Andhra, A. D. 1000-1600. Triveni Publishers. பக். 69. https://books.google.co.in/books?id=HJFXAAAAMAAJ. 
  4. Kambhampati Satyanarayana, தொகுப்பாசிரியர் (1975). A Study of the History and Culture of the Andhras: From stone age to feudalism. People's Publishing House. பக். 334. https://books.google.com/books?id=bYsBAAAAMAAJ. 
  5. "Guild Inscriptions".
  6. Nimmagadda Bhargav, தொகுப்பாசிரியர் (2023). Stringers and the Journalistic Field: Marginalities and Precarious News Labour in Small-Town India. Taylor & Francis. https://books.google.co.in/books?id=NAymEAAAQBAJ. "Kapus in the Telugu - speaking states do not form a neat homogenous category , as they comprise castes such as Kapu , Telaga , Balija and Ontari among many other variants" 
  7. Reddi, Agarala Easwara; Ram, D. Sundar (1994) (in en). State Politics in India: Reflections on Andhra Pradesh. M. D. Publications. பக். 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85880-51-8. https://books.google.com/books?id=vaxxeoPUuqsC&pg=PA339. "The Kapus, concentrated in Guntur, Krishna, West and East Godavari districts are listed among the forward castes. In Rayalaseema districts they are known as Balijas." 
  8. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  9. Daniel D'Attilio, தொகுப்பாசிரியர் (1995). The Last Vijayanagara Kings. University of Wisconsin--Madison. பக். 81. https://books.google.co.in/books?id=p9JOAAAAMAAJ. "......many of the Telugu migrant groups who settled in Tamil Nadu from the fourteenth to sixteenth centuries were led by Balija warriors . These Balijas and their descendants became local rulers under the auspices of Vijayanagara." 
  10. 16.0 16.1
    • David Shulman, தொகுப்பாசிரியர் (2020). Classical Telugu Poetry. University of California Press. பக். 57. https://books.google.com/books?id=SFXVDwAAQBAJ. "..... in the Tamil country, where Telugu Balija families had established local Nāyaka states (in Senji, Tanjavur, Madurai, and elsewhere) in the course of the sixteenth century." 
    • Andhra Pradesh Archives, Andhra Pradesh State Archives & Research Institute, தொகுப்பாசிரியர் (2007). Itihas. 33. Director of State Archives, Government of Andhra Pradesh. பக். 145. https://books.google.com/books?id=9nfP89eJuycC. "....It is told that the Nayak Kings of Madurai and Tanjore were Balijas , who had marital relations among themselves and with the Vijaya Nagara rulers" 
    • Muzaffar Alam, தொகுப்பாசிரியர் (1998). The Mug̲h̲al State, 1526-1750. Oxford University Press. பக். 35. https://books.google.com/books?id=VQJuAAAAMAAJ. "As an arrangement, the Golconda practice in the first half of the seventeenth century was quite similar in crucial respects to what obtained further south, in the territories of the Chandragiri ruler, and the Nayaks of Senji, Tanjavur and Madurai. Here too revenue-farming was common, and the ruling families were closely allied to an important semi-commercial, semi-warrior caste group, the Balija Naidus." 
  11. 18.0 18.1
  12. 19.0 19.1
  13. 20.0 20.1
  14. 21.0 21.1
  15. 22.0 22.1
  16. N. Venkataramanayya (1951). Raghunatha Nayakabhyudayamu. T.M.S.S.M Library, Thanjavur. பக். 21. https://archive.org/details/in.ernet.dli.2015.329694/page/n3/mode/1up. 
  17. Vuppuluri Lakshminarayana Sastri, தொகுப்பாசிரியர் (1920). Encyclopaedia of the Madras Presidency and the Adjacent States. University of Minnesota. பக். 453. https://books.google.co.in/books?id=Z2o_AQAAMAAJ. 
  18. Subramanian, Ajantha (2019) (in en). The Caste of Merit: Engineering Education in India. Harvard University Press. பக். 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780674987883. https://books.google.com/books?id=ifuwDwAAQBAJ&pg=PA100. 
  19. "களைகட்டும் தேர்தல் பந்தயம்!". தினமலர் நாளிதழ் (மே 01, 2021).
  20. "ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர்... எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு". குமுதம்.
  21. Vicuvanātan̲, Ī Ca (1983) (in en). The political career of E.V. Ramasami Naicker: a study in the politics of Tamil Nadu, 1920-1949. Ravi & Vasanth Publishers. பக். 23, 32. https://books.google.com/books?id=L9dIAAAAMAAJ&q=Varadarajulu+naidu+balija. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலிஜா&oldid=3915288" இலிருந்து மீள்விக்கப்பட்டது