புளூநோசு (அஞ்சல்தலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளூநோசு
உற்பத்தியான நாடுகனடா
உற்பத்தியான தேதிசனவரி 8, 1929 (1929-01-08)
காட்டுவதுபுளூநோசு
எப்படி அருமைசெவ்வியல் அஞ்சல்தலை
இருப்பு எண்ணிக்கைதெரியாது
1,044,900 அச்சிடப்பட்டது.
முகப் பெறுமானம்CAN$ 50-சென்ட்
மதிப்பீடுCAN $700

புளூநோசு (Bluenose) என்பது, 8 சனவரி 1929ல் அரசர் ஐந்தாம் ஜார்ஜின் சுருள் வெளியீட்டின் ஒரு பகுதியாக கனேடிய அஞ்சல் அலுவலகம் வெளியிட்ட 50 சென்ட் அஞ்சல்தலையின் அடைபெயர் (nickname) ஆகும். இதன் இசுக்காட் எண் 158. இந்த அஞ்சல்தலையில், மீன்பிடிப் பாய்க்கப்பலான புளூநோசின் படம் அச்சிடப்பட்டுள்ளது. ஒட்டாவாவைச் சேர்ந்த கனேடிய பாங்க் நோட் கம்பனி வடிவமைத்த இந்தத் அஞ்சல்தலையில் உள்ள படம் அலிபக்சு துறைமுகத்தில் இருந்து வெளியேறும் இக்கப்பலின் இரண்டு வெவ்வேறு படங்களின் சேர்க்கையாகும். இது 1900க்குப் பின்னர் வெளியிடப்பட்டிருந்தாலும் இது ஒரு செவ்வியல் அஞ்சல்தலையாகக் கருதப்படுகிறது.[1] கனடாவின் மிகச் சிறந்த அஞ்சல்தலை என அழைக்கப்பட்ட[1] இது சேகரிப்பாளரிடையே பெயர்பெற்றது.[2]

மூன்று அச்சுத் தட்டுகள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் 200 பதிவுகளைக் கொண்ட முதல் தட்டில் பிழை இருந்ததால் அது எப்போதுமே பயன்படுத்தப்படவில்லை. 100 பதிவுகளைக் கொண்ட இரண்டாம், மூன்றாம் தட்டுக்களைப் பயன்படுத்தி 1,044,900 அஞ்சல்தலைப் படிகள் அச்சிடப்பட்டன. அஞ்சல்தலைக்கான ஒளிப்படம் 1922ல் டபிள்யூ. ஆர். மக்ஆசுக்கில் (W.R. MacAskill) என்பவரால் எடுக்கப்பட்டவை. அஞ்சல்தலைக்கான படம் அமெரிக்க பாங்க் நோட் கம்பனியால் வரையப்பட்டது.[3]

2001 ஆம் ஆண்டில் புல்நோசு முதல்நாள் உறை 3,650 கனேடிய டாலர்.[4]

1982 இலும், 199 இலும் வெளியான அஞ்சல்தலைகள் அவற்றின் வடிவமைப்பில் பழைய புல்நோசு அஞ்சல்தலையின் படம் முழுதாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெற்றிருந்தது. 1982ன் அஞ்சல்தலை அஞ்சல்தலையில் அஞ்சல்தலை வடிவமைப்புக் கொண்டது. 1999ன் அஞ்சல்தலை குறித்த கப்பலின் வடிவமைப்பாளர் வில்லியம் சேம்சு ரூவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல்தலை ஆகும்.[5]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 FBNAPS Bluenose is Still Considered Canada’s Finest Stamp பரணிடப்பட்டது 2007-02-06 at the வந்தவழி இயந்திரம் (retrieved 1 October 2006)
  2. Alphabetilately.org (retrieved 1 October 2006)
  3. "#158: Bluenose". Fisheries and Oceans Canada. 2005-07-12. Archived from the original on 2007-09-12. பார்க்கப்பட்ட நாள் 2006-10-01.
  4. Canadian Stamp Auctions: Stamp market commentary April, 2003 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (retrieved 1 October 2006)
  5. Heindorff, Ann Mette (2007-05-13). "Bluenose: A National Symbol of Canada". heindorffhus.dk. Archived from the original on 2009-01-26. பார்க்கப்பட்ட நாள் 2006-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூநோசு_(அஞ்சல்தலை)&oldid=3575631" இலிருந்து மீள்விக்கப்பட்டது