புல் மலைகள் தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புல் மலைகள் தேசிய பூங்கா
Grass Hills National Park
அமைவிடம் India
வால்பாரையில் உள்ள சில்வேமேடு சிகரத்திற்கு செல்லும் பாதை.

புல் மலைகள் தேசிய பூங்கா (Grass Hills National Park) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மேலும் இது இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா பகுதியின் ஒரு பகுதியாகும், கேரள மாநிலத்தில் உள்ள எரவிகுளம் தேசிய பூங்காவின் எல்லையை கொண்டுள்ளது. புல் மலைகள் உண்மையான தேசிய பூங்கா அல்ல. [1] இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2,000 மீட்டர்கள் (6,600 அடி) உயரங்களையுடைய சிகரங்கள் மற்றும் உயர் பீடபூமிகளின் கலவையாகும். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் தனித்துவமான சோலைக்காடுகள் நிறைந்த சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுள்ளது.

முக்கியமான சிகரங்கள், அட்டுப்பரை குருக்கு மேல் (6662 அடி), ஊசி மலை தேரி, கடுகு சுட்டி மலை, சில்வேமெடு ஆகியவைகளைக் கொண்டுள்ளது. இது முதன்மையாக ஒரு சோலைக்காடுகள் நிறைந்த புல்வெளி சூழல் அமைப்பு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://wiienvis.nic.in/Database/npa_8231.aspx
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்_மலைகள்_தேசிய_பூங்கா&oldid=3781968" இலிருந்து மீள்விக்கப்பட்டது