புலியூர் (கொளத்தூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலியூர் என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் பேரூராட்சியை ஒட்டி அமைந்துள்ள சிற்றூராகும். இந்தப் பகுதியில்தான் விடுதலைப்புலிகளின் முதல் பயிற்சி முகாம் நடந்தது. இதனால் இப்பகுதி புலியூர் என பெயர் சூட்டப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

இந்தப் பகுதியில் இருந்த கொளத்தூர் மணியின் தோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் 1983 முதல் 1986ஆம் ஆண்டு வரை நடந்தது. விடுதலைப் புலிகளின் முன்னணித் தளபதி பொன்னம்மான், வழிகாட்டுதலில் நடந்த இந்த முகாமில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் பலர் பயிற்சி பெற்றனர். வே. பிரபாகரன் பலமுறை இங்கு நடந்த பயிற்சி முகாமுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். இங்கு பயிற்சித் தளபதியாக இருந்த பொன்னம்மான், பின்னர் ஈழப்போராட்டக் களத்தில் மரணமடைந்த பிறகு, அவரது நினைவாக புலியூர் பகுதியில் நினைவு நிழற்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.[2] மேலும் இங்கு இறந்த தளபதி ரோயின் கல்லறையும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் 'மாவீரர் நாள்'". கட்டுரை. பெரியார் முழக்கம். 2016 திசம்பர். பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "புலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் 'மாவீரர் நாள்'". கட்டுரை. கீற்று. 1 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலியூர்_(கொளத்தூர்)&oldid=3941607" இலிருந்து மீள்விக்கப்பட்டது