புரோமார்கைரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமார்கைரைட்டுBromargyrite
வெள்ளியுடன் புரோமார்கைரைட்டு - சான் ஓனோபைர், மெக்சிகோ.
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுAgBr
இனங்காணல்
நிறம்மஞ்சள், பசுமை கலந்த பழுப்பு, அடர் பச்சை.
படிக அமைப்புசமபகுதி
பிளப்புஏதுமில்லை
முறிவுசம்மற்றது, துனை சங்குருவம்
விகுவுத் தன்மைசரிபாதியாக வெட்டத்தக்கது.
மோவின் அளவுகோல் வலிமை2 12
மிளிர்வுவளைந்து கொடுக்காத்து, பிசின் போன்றது, மெழுகு போன்றது
கீற்றுவண்ணம்வெண்மையும் மஞ்சளும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
ஒப்படர்த்தி6.474
ஒளியியல் பண்புகள்சமதிருப்பம்
ஒளிவிலகல் எண்n = 2.253
இரட்டை ஒளிவிலகல்δ = 0.000
மேற்கோள்கள்[1][2][3]

புரோமார்கைரைட்டு (Bromargyrite) என்பது AgBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தை புரோமைரைட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். வெள்ளி புரோமைடின் இயற்கையான கனிம வடிவமாக இக்கனிமம் கருதப்படுகிறது. மெக்சிகோ, சிலி போன்ற நாடுகளில் முக்கியமாக புரோமார்கைரைட்டு கனிமம் கிடைக்கிறது. மோவின் அளவு கோலில் இதன் கடினத் தன்மை மதிப்பு 1.5 முதல் 2 என்ற அளவு ஆகும். குளோரார்கைரைட்டும் அயோடைரைட்டும் இதனுடன் தொடர்புடைய பிற கனிமங்களாகும்.

மெக்சிகோ நாட்டின் 32 மாவட்டங்களில் ஒன்றான சகாடிகாசு மாநிலத்தில் 1859 ஆம் ஆண்டு புரோமார்கைரைட்டு கண்டறியப்பட்டது. இங்குள்ள வெள்ளி படிவுகளில் உள்ள முதன்மை தாதுக்களின் ஆக்சிசனேற்ற விளை பொருளாக இக்கனிமம் காணப்பட்டது. இரும்பு மற்றும் மாங்கனீசு ஆக்சைடு தாதுக்களுடன் வெள்ளி, அயோடார்கைரைட்டு மற்றும் சுமித்சோனைட்டு போன்ற கனிமங்களுடன் வறண்ட சுற்றுச் சூழலில் இக்கனிமம் தோன்றுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமார்கைரைட்டு&oldid=2937324" இலிருந்து மீள்விக்கப்பட்டது